இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: குடும்பத்தில் அமைதியான சூழல் காணப்படும். வெளிநாட்டு பயணத்துக்கான விசா கிடைக்கும். வேற்று மதத்தினர் தக்க சமயத்தில் உதவுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள்.

ரிஷபம்: வீட்டில் கல்யாண முயற்சிகள் மீண்டும் வேகமெடுக்கும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். எதிர்பாராத வெளியூர் பயணம் ஏற்படக் கூடும்.

மிதுனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முன்கோபம், வீண் அலைச்சல் வந்துபோகும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். பிள்ளைகளால் நிம்மதியுண்டு. பணவரவு திருப்தி தரும்.

கடகம்: சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். தாயாருக்கு உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள், நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பிள்ளைகளால் பெருமை ஏற்படும்.

சிம்மம்: பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழில் போட்டிகளை சமாளித்து விடுவீர்கள். எதிர்பாராத இடத்தில் இருந்து உதவி கிடைக்கும்.

கன்னி: பிரச்சினைகளை தீர்க்க மாற்று வழியை யோசிப்பீர்கள். முகப்பொலிவு, ஆரோக்கியம் கூடும். மேல் அதிகாரியின் ஆதரவு உண்டு. வீட்டுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள்.

துலாம்: சாதுர்யமாக செயல்பட்டு காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். மனதில் புத்துணர்ச்சி காணப்படும். தம்பதிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் வரும்.

விருச்சிகம்: இன்று சந்திராஷ்டமம் தொடர்வதால் பணத்தை கவனமாக கையாளுங்கள். பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது. அலுவலகத்தில் வேலை சுமை அதிகரிக்கும். வாகனம் தொந்தரவு தரும்.

தனுசு: நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி தேடி வரும். உடல்சோர்வு, வயிற்றுவலி சீராகும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். விருந்தினர் வருகையால் வீடு கலகலப்பாகும்.

மகரம்: வீட்டுக்கு தேவையான நவீன மின்சாதனங்களை வாங்குவீர்கள். மனைவிவழியில் பண உதவி கிட்டும். வாகனப்பழுது நீங்கும். வியாபாரம் சம்பந்தமாக முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள்.

கும்பம்: வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பு, மரியாதை உயரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மிக பயணம் செல்ல திட்டமிடுவீர்கள்.

மீனம்: குடும்பத்தினர் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு தருவார்கள். செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த சில முக்கிய நபர்களை சந்திப்பீர்கள். வேலைச் சுமை குறையும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்