மேஷம்: சாமர்த்தியமாக பேசி பணிகளை முடிப்பீர். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவதால் மன நிம்மதி கிட்டும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.
ரிஷபம்: நம்பிக்கைக்கு உரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர். குடும்பத்தில் நிம்மதியுண்டு. வியாபாரத்தில் பழைய பணியாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் நிம்மதியுண்டு. விவாதம் தவிர்க்கவும்.
மிதுனம்: முன்கோபத்தை குறைப்பீர். பெரிய பதவியில் உள்ளவர்கள் அறிமுகமாவர். அரசால் ஆதாயம் உண்டு. ஷேர் மூலம் பணம் வரும். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பாக்கி வசூலாகும். உத்தியோகம் சிறக்கும்.
கடகம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தாய்வழி உறவினர் வீடு தேடி வருவர். கையில் பணம் புரளும். அலுவலகரீதியாக இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். வியாபாரம் தொடர்பான பயணம் ஏற்படும்.
சிம்மம்: பணவரவு திருப்தி தரும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவர். நீண்ட நாளாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் தேடி வருவார். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
கன்னி: எடுத்த வேலையை முடிக்க தீவிரமாக போராட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் குழப்பங்கள் வந்து போகும். அலுவலகரீதியான வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. மேலதிகாரியின் பாராட்டு கிடைக்கும்.
துலாம்: முன்கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் லாபமுண்டு. உத்தியோகம் சிறக்கும்.
விருச்சிகம்: தம்பதிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர். முன் கோபம் விலகும். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
தனுசு: உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உண்டு.
மகரம்: மன வலிமையுடன் எதையும் சாதிப்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்.
கும்பம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர். நண்பர்களால் ஆதாயம் உண்டு. அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். கூட்டுத் தொழில் பங்குதாரர்களுடன் இருந்த குழப்பம் நீங்கும்.
மீனம்: வேலைகளை முடிக்க போராடுவீர்கள். வாகனம் செலவுவைக்கும். உடல்நலத்தில் கவனம் செலுத்தவும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் பார்க்கலாம்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
6 days ago