இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: தெளிவாக பேசி சில வேலைகளை முடித்துக் காட்டுவீர். தம்பதிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வங்கியில் வாங்கிய கடனை தீர்க்க வழி கிடைக்கும். வியாபாரம் சிறக்கும். உத்தியோகத்தில் நிம்மதி கிட்டும்.

ரிஷபம்: குடும்பத்துடன் குலதெய்வ கோயிலுக்கு சென்று வருவீர். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வாகனத்தை மாற்றுவீர். வியாபாரம் லாபம் தரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும்.

மிதுனம்: நம்பிக்கைக்கு உரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர். தம்பதிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர்கள் வீடு தேடி வருவர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். உத்தியோகம் சிறக்கும்.

கடகம்: எதிர்ப்புகள் விலகும். உங்களின் செயலை பார்த்து மற்றவர்கள் வியப்பர். குடும்பத்தில் நிம்மதி தங்கும். புது இடத்துக்கு கடையை மாற்றுவீர். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். மேலதிகாரி பாராட்டுவார்.

சிம்மம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். கையிருப்பு கரையக் கூடும். வாகனத்தில் நிதானம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரியிடம் கோபத்தை காட்டாதீர். வியாபாரத்தில் பங்குதாரரிடம் எச்சரிக்கை அவசியம்.

கன்னி: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். வியாபாரத்தில் பணியாட்களின் ஆதரவு உண்டு. அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

துலாம்: புது முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். குலதெய்வ பிரார்த்தனை நிம்மதி தரும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உண்டு.

விருச்சிகம்: எதிர்பார்த்த வேலை தடையின்றி முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். தூக்கமின்மை, மன உளைச்சல் நீங்கும். தாய்வழி உறவினர்கள் தேடி வருவர். அலுவலகத்தில் நிம்மதியுண்டு. வியாபாரம் லாபம் தரும்.

தனுசு: பேச்சில் தெளிவு பிறக்கும். சகோதரர்களால் ஆதாய முண்டு. முரண்டு பிடித்த பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவர். தாயாரின் உடல்நலம் சீராகும். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

மகரம்: உங்களின் அணுகுமுறையை மாற்றி தடைபட்ட வேலையை முடிப்பீர். சகோதரியின் விசேஷத்துக்கு அதிகம் உழைப்பீர். உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்.

கும்பம்: மற்றவர்களின் ரசனைக்கேற்ப செயல்படுவீர். உறவினர்கள் உங்களை பெருமையாக பார்ப்பார்கள். சொந்த ஊரில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் பொறுப்பு கூடும்.

மீனம்: முன்கோபம், டென்ஷன் இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

21 hours ago

ஜோதிடம்

22 hours ago

ஜோதிடம்

22 hours ago

ஜோதிடம்

22 hours ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

மேலும்