இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: தம்பதிக்குள் இருந்து வந்த பிணக்குகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். புதிய பங்குதாரரின் ஆலோசனையால் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். உத்தியோகம் சிறக்கும்.

ரிஷபம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். உங்களின் நிர்வாக திறமை வெளிப்படும். அரசால் அனுகூலம் உண்டு. பிள்ளைகளின் தனித் திறமைகளை கண்டறிவீர். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

மிதுனம்: பேச்சில் நிதானம் தேவை. தம்பதிக்குள் விட்டு கொடுக்கவும். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டு. வீண் விவாதம் தவிர்ப்பீர். வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். புதிய யுக்திகளை கையாளுவீர்.

கடகம்: விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். மாணவர்களின் கவனம் படிப்பில் திரும்பும். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் முக்கிய பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைப்பார்கள்.

சிம்மம்: சவாலான விஷயங்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் ஆலோசனையை கேட்டு நடப்பர். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.

கன்னி: குடும்பத்தினரின் விருப்பங்களை கேட்டறிந்து நிறைவேற்றுவீர். கையில் பணம் புரளும். விஐபிகளை சந்திப்பதால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகப் பிரச்சினை விலகும்.

துலாம்: ஊர் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர். தம்பதிக்குள் நெருக்கம் உண்டாகும். கையில் பணம் புரளும். தாயாரின் உடல்நலம் சீராகும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

விருச்சிகம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பணவரவு உண்டு. ஏமாற்றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர். கூட்டுத்தொழிலில் போட்டிகள் குறையும். அலுவலகத்தில் உங்கள் மீது இருந்த வீண் பழி அகலும்.

தனுசு: திடீர் பயணங்கள் அலைச்சல் தரும். உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். எடுத்த வேலையை முடிக்கபோராடுவீர். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் யாரையும் குறை கூறாதீர்கள்.

மகரம்: திர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். தம்பதிக்குள் இருந்து வந்து குழப்பங்கள் விலகும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும்.

கும்பம்: குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிட்டும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். முன்கோபம் குறையும். அலுவலகத்தில் எதிர்பாராத திருப்பங்கள் உண்டாகும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பர்.

மீனம்: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வழக்கு சாதகமாகும். உறவினர்களுடன் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வியாபாரத்தில் பணியாட்களின் ஆதரவு கிட்டும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

50 mins ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

6 days ago

மேலும்