இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் சுற்றி இருப்பவர்களின் நன்மதிப்பை பெறுவீர். வியாபாரத்தில் பங்குதாரர்கள் அனுசரித்து போவார்கள். உத்தியோகம் சிறக்கும்.

ரிஷபம்: புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுப்படுத்துவீர். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்.

மிதுனம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களின் உதவியை நாடி பழைய நண்பர்கள் வருவர். தாயாரின் மருத்துவச் செலவுகள் குறையும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

கடகம்: உறவினர்களுடன் இருந்து வந்த மனஸ்தாபம் விலகும். பிள்ளைகளின் பாசம் அதிகரிக்கும். தந்தைவழி அநாவசிய செலவை கட்டுப்படுத்துவீர். அலுவலகத்தில் உங்களின் அருமை புரியும். வெளியூர் பயணம் உண்டு.

சிம்மம்: நெளிவு, சுளிவுடன் செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டு.

கன்னி: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். பிரபலங்களின் நட்பு கிட்டும். அரசால் அனுகூலம் உண்டு. தாயாரின் உடல்நிலை சீராகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர். வியாபாரத்தில் லாபம் உண்டு.

துலாம்: வீண் செலவு வரும். குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனையை கேட்டு செயல்படவும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர். புதிய பங்குதாரர் கிடைப்பார். அலுவலகத்தில் விவாதங்கள் வேண்டாம்.

விருச்சிகம்: பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர். மனைவிவழி உறவினர்கள் தேடி வருவர். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.

தனுசு: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். முன்கோபம் விலகும். உங்களின் ஆளுமை திறன் அதிகரிக்கும். பங்குதாரர் உதவியுடன் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.

மகரம்: எதிர்பாராத சந்திப்புகள் நிகழும். பால்ய நண்பர்கள் உதவுவர். உடன்பிறந்தோரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். அலுவலகத்தில் சக ஊழியர் மதிப்பர். வியாபாரத்தை விரிவுபடுத்த புது முயற்சிகள் எடுப்பீர்.

கும்பம்: வீட்டில் தள்ளிப் போய்க் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிக்கு தேதி குறிப்பீர். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வாகனத்தை சரி செய்வீர். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில் புதிய பதவி கிட்டும்.

மீனம்: சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். வாகனத்தில் நிதானம் தேவை. வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வீண் விவாதங்களை தவிர்க்கவும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

16 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

22 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

மேலும்