இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெரியோரின் ஆசி கிடைக்கும். பிள்ளைகளால் மனநிம்மதி கிட்டும். கல்யாண முயற்சி நல்ல விதத்தில் முடியும். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

ரிஷபம்: மகளின் திருமண பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். நல்ல இடவசதியுடன் கூடிய வீட்டுக்கு குடிபுகுவீர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆலோசனை கேட்டு நடக்கவும்.

மிதுனம்: பிள்ளைகளின் சாதனைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். புது திட்டங்கள் தீட்டுவீர். தியானம், ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.

கடகம்: மறைமுக எதிர்ப்புகளை வெல்வீர். தம்பதிக்குள் நிலவி வந்த பனிப்போர் மறையும். வெளியூரிலிருந்து நற்செய்தி வரும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர் கிடைப்பார். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.

சிம்மம்: சகோதரர்களுடன் பேசி பூர்வீக சொத்துப் பிரச்சினைகளை தீர்க்க வழி பிறக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் பார்க்கலாம். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டு. மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்.

கன்னி: குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து நடக்கவும். பிள்ளைகள் பொறுப்பு உணர்ந்து செயல்படுவர். அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபமுண்டு. பழைய சரக்குகள் விற்றுத் தீரும்.

துலாம்: பால்ய நண்பர்கள் உதவுவர். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு புது வேலை அமையும். வியாபாரரீதியாக வெளியூர் பயணங்கள் செல்வீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர் மத்தியில் மதிப்பு உயரும்.

விருச்சிகம்: பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகள் அன்பாக நடந்து கொள்வர். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த சிலரின் உதவியை நாடுவீர்.

தனுசு: தம்பதிக்குள் நெருக்கம் உண்டாகும். வராது என்றிருந்த பணம் வரும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவர். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் பதவி உயர்வு கிட்டும்.

மகரம்: குடும்பத்தில் எல்லாவற்றையும் பார்க்க வேண்டியிருக்கும். உறவினர்களால் ஆதாயமுண்டு. கடன் பிரச்சினை தீரும். வியாபாரத்தில் போட்டி உடைபடும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

கும்பம்: குடும்பத்துடன் குலதெய்வ கோயிலுக்கு செல்வீர். அலுவலகத்தில் சக ஊழியருடன் இணக்கமாக செயல்படவும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாக பேசவும். பங்குதாரர்களால் தொல்லை வரும்.

மீனம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தந்தையின் உடல் நலம் சீராகும். பழைய நண்பர்களை சந்திப்பீர். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர். பொறுப்புகள் கூடும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

16 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

மேலும்