மேஷம்: தடைகளை பொருட்படுத்தாமல் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். சேமிப்பு அதிகரிக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். வீடு, வாகன பழுதை சரிசெய்வீர்கள்.
ரிஷபம்: வெளிவட்டார தொடர்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். மனைவி வழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். தொண்டை புகைச்சல், வயிற்று வலி நீங்கும். பண வரவு உண்டு.
மிதுனம்: புதிய நபர்களின் அறிமுகத்தால் ஆதாயம் கிடைக்கும். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். குழப்பங்கள் விலகும். உடல்நலத்தில் முன்னேற்றம் உண்டு. தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.
கடகம்: உறவினர்கள், நண்பர்கள் வருகையால் வீடு களை கட்டும். பிள்ளைகளின் விருப்பத்தை அறிந்து நிறைவேற்றுவீர்கள். மருத்துவ செலவு குறையும். குடும்பத்தினர் ஆதரவு உண்டு.
» ரூ.84,000 பணம், பீருக்காக குழந்தையை விற்க முயன்ற அமெரிக்க தம்பதி கைது
» ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் இருப்பிடத்தை காட்டி கொடுத்த ஈரான் உளவாளி
சிம்மம்: வீண் செலவுகளால் கையிருப்பு கரையும். பிள்ளைகளால் அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். வாயு கோளாறு, சளி தொந்தரவு வந்து நீங்கும்.
கன்னி: விலகி சென்ற உறவினர்கள், நண்பர்கள் விரும்பி வருவார்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலக ரீதியாக முக்கிய முடிவு எடுப்பீர்கள்.
துலாம்: கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்தி வரும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். தலைவலி, காய்ச்சல் நீங்கும்.
விருச்சிகம்: மனக் குழப்பங்கள் விலகும். வெளியூர் பயணத்தால் அனுகூலம் உண்டு. கணவன் - மனைவிக்குள் நெருக்கம் கூடும். பண வரவு அதிகரிக்கும். உத்தி யோகத்தில் உயர் அதிகாரியின் ஆதரவு உண்டு.
தனுசு: குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். எல்லாவற்றுக்கும் அடுத்தவரை குறைகூறாதீர்கள். அக்கம் பக்கத் தினரை அனுசரித்து செல்வது அவசியம். சாலையை கடக்கும்போது கவனம் தேவை.
மகரம்: செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். அதற்கேற்ப வருமானத்தை பெருக்க வேண்டும் என்று யோசிப் பீர்கள். பணம், நகை, முக்கிய கோப்புகளை கவனமாக கையாள்வது அவசியம்.
கும்பம்: கணவன் - மனைவிக்குள் மனம்விட்டு பேசுவீர்கள். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு காண்பீர்கள். குழப்பங்கள் விலகும். திடீர் பணவரவு உண்டு. விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள்.
மீனம்: வீண் குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் குறையும். உடல்நலம் நிம்மதி தரும். வருங்காலத்துக்காக சேமிப்பீர்கள். மனதுக்கு பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
3 days ago