மேஷம்: சோர்வாக இருந்த நீங்கள் சுறுசுறுப்படைவீர். சிந்தனைத் திறன் அதிகரிக்கும். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.
ரிஷபம்: குடும்பத்தினருடன் சென்று குலதெய்வ பிரார்த்தனை களை நிறைவேற்றுவீர். தாயின் உடல்நிலை சீராக அமையும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் வீண் விவாதம் தவிர்க்கவும்.
மிதுனம்: குழப்பம் நீங்கி குடும்பத்தில் அமைதி நிலவும். கடன் பிரச்சினைகளுக்கு மாற்றுவழி காண்பீர். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வியாபாரத்தில் லாபமுண்டு. அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.
கடகம்: வெளிவட்டாரத்தில் உங்கள் மதிப்பு உயரும். பூர்வீக சொத்தில் இருந்த வில்லங்கம் விலகும். பிள்ளைகளின் வருங்காலத்துக்கான முக்கிய முடிவு எடுப்பீர். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.
சிம்மம்: எதிர்மறை சிந்தனை வரும். குடும்பத்தில் மூத்தவர்களின் ஆலோசனையை கேட்பது நல்லது. திட்டமிட்ட காரியங்கள் தாமதமாக முடியும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
கன்னி: முக்கிய பிரமுகர்களின் வீட்டு விசேஷங்களில் பங்கேற்பீர். பங்குதாரரின் ஆலோசனையை கேட்டு வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். வங்கி கடனுதவி கிட்டும். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டு.
துலாம்: குடும்பத்தாரின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர். பிள்ளைகளால் வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். புதிய கொள்முதல் செய்வீர் உத்தியோகத்தில் மேன்மை உண்டு.
விருச்சிகம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். கேட்ட இடத்தில் உதவி கிட்டும். உத்தியோகத்தில் வீண் குழப்பங்கள் விலகும். வியாபாரத்தில் லாபம் உண்டு.
தனுசு: குடும்ப சூழ்நிலை அறிந்து பொறுப்பாக நடந்து கொள்வீர். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டு. வியாபாரரீதியாக சிலரது அறிமுகம் கிட்டும். பழைய வாடிக்கையாளர்கள் திரும்பி வருவார்கள்.
மகரம்: பணப்பற்றாக்குறை வந்து போகும். வீட்டில் உங்கள் பேச்சுக்கு மதிப்பிருக்காது. ஆன்மிகவாதிகளின் ஆசி கிட்டும். முன்கோபத்தை குறையுங்கள். வியாபாரம், உத்தியோகத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
கும்பம்: எதிர்பார்த்தபடி பணம் வரும். பழைய கடனை பைசல் செய்வீர். தாய்வழி உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு மறையும். வியாபாரரீதியாக புதிய திட்டங்களை தீட்டுவீர். அலுவலகத்தில் மதிப்பு கூடும்.
மீனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு சுமுக தீர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரம் சூடு பிடிக்கும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago