மேஷம்: பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த பயம் விலகும். துணிச்சலுடன் முடிவு எடுப்பீர். தம்பதிக்குள் அனுசரித்து போவீர். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும். அலுவலகத்தில் விரும்பிய இடமாற்றம் உண்டு.
ரிஷபம்: வீண் செலவுகளை கட்டுப்படுத்துவீர். அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். உத்தியோகம் சிறக்கும்.
மிதுனம்: குழப்பம் நீங்கி குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். பூர்வீகவீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆதரவு உண்டு. அலுவலகத்தில் உங்கள் மீது இருந்த வீண் பழி அகலும்.
கடகம்: பழைய பிரச்சினைகள் தலை தூக்கும். வீண் பயம், கவலை வரும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
» எமர்ஜென்சியில்கூட இவ்வளவு நாள் சிறை கிடையாது: செந்தில் பாலாஜியை வரவேற்று முதல்வர் ஸ்டாலின் கருத்து
» 471 நாட்களுக்கு பிறகு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்: 6 நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் உத்தரவு
சிம்மம்: பணப் பற்றாக்குறை விலகும். மனதுக்கு பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர். அலுவலகத்தில் மனநிறைவுடன் சில வேலைகளை செய்து முடிப்பீர். தொழில் சிறக்கும்.
கன்னி: உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர். தந்தைவழி சொத்துகள் கைக்கு வரும். உறவினர் மத்தியில் மதிக்கப்படுவீர். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் வீண் குழப்பங்கள் நீங்கும்.
துலாம்: வெளிவட்டாத்தில் மதிப்பு கூடும். குடும்ப உறுப்பினர்களுடன் மனம் விட்டு பேசுவீர். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.
விருச்சிகம்: அடிமனதிலிருந்த பயம் நீங்கி, துணிச்சலாக முடிவு எடுப்பீர். தம்பதிக்குள் அனுசரித்து போவீர்கள். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமையுண்டு. அலுவலகத்தில் அமைதி காக்கவும். வியாபாரம் சிறக்கும்.
தனுசு: நீங்கள் நல்லது சொல்லப் போய் சிலர் தவறாக புரிந்துகொள்வர். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் யாரை பற்றியும் குறை கூற வேண்டாம்.
மகரம்: உங்களின் குறிக்கோளை எட்டிப் பிடிக்க முயற்சிப்பீர். பணவரவு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். அலுவலகத்தில் நீங்கள் தேடிய முக்கிய ஆவணம் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்.
கும்பம்: அதிரடி திட்டங்கள் தீட்டுவீர். பணவரவு திருப்தி தரும். தந்தைவழி சொத்துகள் கைக்கு வரும். அலுவலகத்தில் முக்கிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் உண்டு.
மீனம்: குழப்பங்கள் நீங்கி மனதில் தெளிவு பிறக்கும். உறவினர், நண்பர்கள் வருகையால் வீடு களைகட்டும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago