மேஷம்: தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர். ஆடம்பர செலவுகளை குறைப்பீர். சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.
ரிஷபம்: நட்பு வட்டம் விரியும். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர். தாயாருடன் வீண் விவாதம் வரும். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.
மிதுனம்: எந்த காரியத்தை தொட்டாலும் போராடி முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்து கொள்வர். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
கடகம்: எதிரிகளின் கொட்டம் அடங்கும். தம்பதிக்குள் நெருக்கம் அதிகமாகும். விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். வெளியூர் பயணங்கள் திருப்தி தரும். வியாபாரம் சிறக்கும். அலுவலக பொறுப்பு கூடும்.
சிம்மம்: உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர் யார் என்பதை உணர்வீர். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. மிகவும் கடினமான திட்டத்தை செயல்படுத்தி மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்.
கன்னி: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர். தம்பதிக்குள் மகிழ்ச்சி உண்டு. வியாபாரரீதியான அலைச்சல்களிலிருந்து விடுபடுவீர். அலுவலகத்தில் நீங்கள் தேடிய முக்கிய ஆவணம் கிடைக்கும்.
துலாம்: மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். சகோதர வகையில் நன்மை உண்டு. மகளின் திருமண பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மதிப்பர்.
விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். வியாபாரத்தில் போராடி பாக்கிகளை வசூலிப்பீர். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித் தாலும் உரிய அங்கீகாரம் கிடைக்கும்.
தனுசு: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவர். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர். வியாபாரம் சிறக்கும்.
மகரம்: புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர். குழப்பம் நீங்கி குடும்பத்தில் அமைதி திரும்பும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரரீதியான அலைச்சல் குறையும். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும்.
கும்பம்: சோர்வாக இருந்த நீங்கள் சுறுசுறுப்படைவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்வீர். அலுவலகத்தில் புதிய பதவி கிடைக்கும்.
மீனம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். சகோதரர்கள் உறுதுணையாக இருப்பர். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago