இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: பணவரவு உண்டு. சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர். குடும்பத்தில் உங்கள் மதிப்பு உயரும். அலுவலகத்தில் பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். வியாபார ரீதியாக பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும்.

ரிஷபம்: குடும்பத்தாருடன் வளைந்து கொடுத்து போவது நல்லது. தம்பதிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். பிறரை குறை கூறுவதை நிறுத்துங்கள். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் அமைதி காப்பது நன்மை தரும்.

மிதுனம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வெளி வட்டார தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

கடகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவர். உறவினர் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.

சிம்மம்: தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை, வீண் சந்தேகம் விலகும். அலுவலகத்தில் புது பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர். வியாபாரத்தை விரிவுபடுத்த முற்படுவீர்.

கன்னி: குடும்ப வருமானத்தை உயர்த்த புதுமுயற்சிகளை மேற்கொள்வீர். பிள்ளைகள் பொறுப்பு உணர்ந்து நடந்து கொள்வர். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.

துலாம்: கையிருப்புகரையும். குடும்பத்தாருடன் விட்டுக்கொடுத்து போகவும். பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். அலுவலகத்தில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களை கவருவீர்.

விருச்சிகம்: குடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதம் வந்து போகும். பழைய சொந்தங்கள் தேடி வரும். வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்வீர். அலுவலகத்தில் சக ஊழியருடன் இணக்கமான போக்கை கடைபிடிக்கவும்.

தனுசு: இலக்கை நோக்கி முன்னேறுவீர். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் கிடைக்கும்.

மகரம்: புதிய முயற்சிகள் வெற்றியடையும். வீட்டில் மகிழ்ச்சி தங்கும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். முன்கோபம் குறையும். வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவர். உத்தியோகம் சிறக்கும்.

கும்பம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் வருங்காலத்துக்கான முக்கிய முடிவு எடுப்பீர். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் புதிய பதவி கிடைக்கும்.

மீனம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவீர். வீண் செலவுகளை குறைக்கவும். பிள்ளைகளால் பெருமை அடைவீர். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலக பிரச்சினை தீரும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

மேலும்