இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: முன்கோபத்தை தவிர்த்து அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். குடும்பத்தில் நிம்மதியுண்டு. வியாபாரத்தில் லாபம் பார்க்கலாம். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடத்துக்கு மாற்றல் கிடைக்கும்.

ரிஷபம்: தடைபட்ட வேலைகளை மாறுபட்ட அணுகு முறையால் முடித்துக் காட்டுவீர். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். உத்தியோகம் சிறக்கும்.

மிதுனம்: பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். பழைய வழக்கில் வெற்றி பெறுவீர். வியாபாரம் தொடர்பான சங்கத்தின் முக்கிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர். அலுவலகத்தில் உயரதிகாரி பாராட்டுவார். மதிப்பு உயரும்.

கடகம்: உறவினர் மத்தியில் அந்தஸ்து உயரும். பழைய பாக்கி வசூலாகும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும்.

சிம்மம்: பொது விவாதங்களில் வெற்றி பெறுவீர். மன இறுக்கம் நீங்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிரபலங்கள் மத்தியில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் லாபம் பார்க்கலாம். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

கன்னி: எடுத்த வேலையை முடிக்க அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். வியாபாரரீதியான பயணம் இருக்கும். அலுவலகத்தில் யாரை பற்றியும் குறை கூறாதீர்கள்.

துலாம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புது வேலையில் சென்று அமர்வீர். உறவினர், நண்பர்கள் விரும்பி வந்து பேசுவர். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிட்டும்.

விருச்சிகம்: நீண்ட நாட்களாக எதிர்பார்த்த அயல் நாட்டு பயணம் சாதகமாக அமையும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மதிப்பர். வித்தியாசமான யுக்திகளைக் கையாண்டு புதிய வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள்.

தனுசு: பொது அறிவை வளர்த்து கொள்வீர். பயணங்கள் திருப்திதரும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் உங்கள் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.

மகரம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பூர்வீக வீட்டை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

கும்பம்: வேற்றுமொழி, வேற்றுமதத்தினர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறை வேற்றுவீர். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் கிடைப்பர். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை கூடும்.

மீனம்: குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். வேற்றுமொழி பேசுபவர்களால் நல்லது நடக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE