மேஷம்: எதிலும் வெற்றி பெறுவீர். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர். வியாபார ரீதியான பயணங்கள் திருப்தி தரும். உத்தியோகம் சிறக்கும்.
ரிஷபம்: எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவி கிடைக்கும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். குடும்பத்தில் அமைதி நிலவும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் வீண் விவாதங்கள் வேண்டாம்.
மிதுனம்: முகப்பொலிவு கூடும். அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர் கிடைப்பார். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.
கடகம்: சிக்கலான, சவாலான காரியங்களை கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்காது. பங்குதாரர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை கூடும்.
சிம்மம்: வெளுத்ததெல்லாம் பாலாக நினைக்காதீர்கள். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர். சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். அலுவலகத்தில் பிறரை குறை கூறுவதை தவிர்க்கவும்.
கன்னி: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சகோதரர்களின் ஆதரவு உண்டு. வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். உத்தியோகத்தில் மாற்றங்கள் உண்டு.
துலாம்: உறவினர்களால் ஆதாயம் உண்டு. புதிய எலெக்ட்ரானிக்ஸ், கலை பொருட்கள் வாங்குவீர். வியாபாரத்தில் பெரிய நிலையை அடைவீர். கடினமான காரியங்களை செய்து, மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்.
விருச்சிகம்: நெடுநாளாக திட்டமிட்டுக் கொண்டிருந்த சில காரியங்களை செயல்படுத்துவீர். பங்குதாரர்களின் ஆலோசனைப்படி வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். உத்தியோகத்தில் உயரதிகாரியின் ஆதரவு கிட்டும்.
தனுசு: எதிர்காலத்தைப் பற்றிய பயம் விலகும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தவும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் பணிச் சுமை குறையும். புதிய திட்டத்துக்கு தலைமை ஏற்பீர்.
மகரம்: வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். புதிய பங்குதாரர் கிடைப்பார். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.
கும்பம்: வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகை உண்டு. குடும்ப உறுப்பினர்களின் எண்ணத்தை கேட்டறிந்து நிறைவேற்றுவீர். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. அலுவலகத்தில் புதிய பதவி கிடைக்கும்.
மீனம்: கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போகவும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் தொந்தரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை வசூலிக்க போராடுவீர். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பர்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago