இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிடைக்கும். உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும்.

ரிஷபம்: மன வலிமையுடன் இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். வியாபாரம் தொடர்பாக வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும். உத்தியோகம் சிறக்கும்.

மிதுனம்: கணவன் - மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். அலுவலக ரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும்.

கடகம்: கையில் பணம் புரளும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவர். நீண்ட நாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.

சிம்மம்: முன்கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியையோசிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவர். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டு. அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

கன்னி: பழைய பள்ளி, கல்லூரி நண்பர்கள் உங்களைத் தேடி வருவர். குடும்பத்தில் குழப்பம் நீங்கி மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு பெருகும்.

துலாம்: தம்பதிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர். முன் கோபம் விலகும். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். அலுவலகரீதியாக பயணங்கள் இருக்கும்.

விருச்சிகம்: பிள்ளைகளின் பிடிவாதம் குறைந்து உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். மகளுக்கு உடனே திருமணம் கூடி வரும். வியாபாரத்தில் வராக்கடன் வந்து சேரும். அலுவலக பணிகளில் இருந்த தொய்வு விலகும்.

தனுசு: குடும்பத்தார் விருப்பங்களை நிறைவேற்றுவீர். தாய்வழி உறவினர்களிடம் இருந்த மனக்கசப்பு நீங்கும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

மகரம்: உங்களின் அணுகுமுறையை மாற்றவும். பணப் பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்த்துவிடவும்.

கும்பம்: முக்கிய பிரமுகர்களின் உதவியுடன் சில காரியங்களை விரைந்து முடிப்பீர். அரசால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் புதிய பதவிக்கு தேர்வு செய்யப்படுவீர்.

மீனம்: நேர்கொண்ட பார்வையுடன் சில முடிவுகள் எடுப்பீர்கள். பிரபலங்கள் உதவுவர். அலுவலக பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் பணியாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்