இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: தடைபட்ட அரசாங்க வேலைகள் முடியும். முக்கிய பிரமுகர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் சென்று கலந்து கொள்வீர். வியாபாரம் லாபம் தரும். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

ரிஷபம்: சில காரியங்களை முடிப்பதில் தடை ஏற்படும். பணவரவு உண்டு. கூட்டுத் தொழிலில் நிதானம் தேவை. பங்குதாரர்களின் ஆலோசனைகளை கேட்டு நடக்கவும். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

மிதுனம்: வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். புது வேலை அமையும். பிள்ளைகளால் பெருமையடைவீர். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். உத்தியோகத்தில் நீங்கள் விரும்பிய இடமாற்றம் உண்டு.

கடகம்: அதிகார பதவியில் இருப்பவர் அறிமுகமாவார். முன்கோபத்தை குறைப்பீர். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் கிடைக்கும்.

சிம்மம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் வீடு தேடி வருவர். பணம் புரளும். அலுவலகரீதியாக இருந்து வந்த பிரச்சினைகள் பனியாய் உருகும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

கன்னி: பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். கூட்டுத் தொழிலில் கடையை விரிவுபடுத்துவீர். உத்தியோகம் சிறக்கும்.

துலாம்: உறவினர், நண்பர்களின் ஆதரவு உண்டு. விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர். வியாபாரத்தில் போட்டி குறையும். அலுவலகத்தில் உங்கள் மீது இருந்த வீண் பழி அகலும்.

விருச்சிகம்: மனக் குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர். தம்பதிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

தனுசு: தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர். பழைய கடன், பகையை நினைத்து பயம் வரும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் போராட்டம் உண்டு.

மகரம்: எதிர்பாராத பயணங்களால் ஆதாயம் உண்டு. முக்கிய பிரமுகர்களின் நட்பு கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். தம்பதிக்குள் இருந்த பிரச்சினை விலகும். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.

கும்பம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். மாறுபட்ட அணுகுமுறையால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் பெரிய பதவியில் இருப்பவரின் தொடர்பு கிடைக்கும்.

மீனம்: பேசாமல் இருந்த உறவினர், நண்பர்கள் வலிய வந்து பேசுவர். குடும்பத்துடன் சென்று குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

15 mins ago

ஜோதிடம்

16 mins ago

ஜோதிடம்

22 hours ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

மேலும்