மேஷம்: எதிர்மறை எண்ணங்கள் வரும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளவும். வியாபாரம் தொடர்பாக யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.
ரிஷபம்: வெளிவட்டாரத்தில் பதவிகள் தேடி வரும். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புது வேலை அமையும். அரசால் அனுகூலம் உண்டாகும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
மிதுனம்: பிள்ளைகளின் எதிர்காலத்தை கருதி முக்கிய முடிவுகள் எடுப்பீர். மனைவிக்கு இருந்து வந்த சுவாசக் கோளாறு, சைனஸ் பிரச்சினை நீங்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
கடகம்: முகத்தில் தெரிந்த சோகம் நீங்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் நட்புறவாடுவர். வியாபாரத்தில் புது சரக்குகளை கொள்முதல் செய்வீர். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.
» உலகின் சிறந்த நாடுகளின் பட்டியல் - சுவிட்சர்லாந்துக்கு முதலிடம்; 33-வது இடத்தில் இந்தியா
சிம்மம்: இங்கிதமாகவும், இதமாகவும் பேசி அனைவரையும் கவருவீர். கடன் பிரச்சினைகளில் ஒன்று தீரும். மனைவி, தாயாரின் உடல்நலம் சீராகும். வியாபாரம், உத்தியோகத்தில் நல்ல நிலைமைக்கு வருவீர்கள்.
கன்னி: புது வீடு, மனை, வாகனம் வாங்குவது குறித்து யோசிப்பீர். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் போட்டிகள் குறையும். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடத்துக்கு மாற்றல் கிடைக்கும்.
துலாம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வீர். வழக்கில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். வியாபாரத்தில் பிரபலங்களின் அறிமுகம் கிட்டும். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்க்கவும்.
விருச்சிகம்: சுபநிகழ்ச்சிகளால் அலைச்சல்களும், செலவுகளும் அதிகரிக்கும். நெருங்கியவரிடம் மனக் குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர். வியாபாரத்தில் நிதானம் தேவை. அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
தனுசு: தள்ளிப் போய்கொண்டிருந்த சுபகாரியங்கள் கை கூடி வரும். பணவரவால் வீடு, வாகனத்தை மாற்றுவீர். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் உதவிகரமாக இருப்பர். அலுவலகத்தில் குழப்பம் நீங்கி நிம்மதி பிறக்கும்.
மகரம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர். மனைவிவழி உறவினர்கள் உங்களிடம் பணிவர். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர் வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும்.
கும்பம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் புதிய பதவி கிடைக்கும்.
மீனம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரம், உத்தியோகத்தில் நல்ல மாற்றம் இருக்கும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago