மேஷம்: கணவன் - மனைவிக்குள் ஈகோ பிரச்சினைகள் வரும். சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் இருக்கும். வீண் விவாதங்கள் வேண்டாம்.
ரிஷபம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில பணிகளை முடிப்பீர். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணப் பற்றாக்குறை நீங்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
மிதுனம்: நினைத்தது நிறைவேறும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவர். உங்களை சுற்றி இருப்பவர்களில் நல்லவர்களை கண்டறிவீர். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.
கடகம்: தேவைகள் பூர்த்தியாகும். வெளிவட்டாரத் தொடர்பு கள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர். வியாபாரத்தில் இருந்த டென்ஷன் விலகும். உத்தியோகத்தில் புதிய பதவி கிடைக்கும்.
» கூகுள் பே பயன்படுத்தி புதிய வகை மோசடி: கவனமாக இருக்க போலீஸார் அறிவுரை
» ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசாவில் கரையை கடந்தது: தமிழகத்தில் 6 நாட்கள் மழை வாய்ப்பு
சிம்மம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் நீங்கள் தேடிய ஆவணம் கிடைக்கும்.
கன்னி: அவசரத்துக்கு கைமாற்றாக வாங்கியிருந்த தொகையை தந்து முடிப்பீர். தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். வியாபாரம் விறுவிறுப்பாக அமையும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
துலாம்: சமயோஜித புத்தியுடன் பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர். கணவன் மனைவிக்குள் பரஸ்பரம் புரிந்து கொள்வீர். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலக பணிச்சுமை குறையும். மதிப்பு உயரும்.
விருச்சிகம்: வெளிவட்டாரத்தில் அலைச்சல் இருக்கும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். குடும்ப உறுப்பினர்களுடன் இணக்கமாகச் செல்லவும். வியாபாரம், உத்தியோகத்தில் அவசர முடிவை தவிர்க்கவும்.
தனுசு: தெளிவான முடிவால் தொல்லை நீங்கும்.உத்தியோகத்தில் இழுபறியாக இருந்த வேலைகளை முடித்து மேலதிகாரியால் பாராட்டப்படுவீர். வியாபாரம் சூடு பிடிக்கும். எதிர்பார்த்த உதவி உடனே கிடைக்கும்.
மகரம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சேமிக்கும் எண்ணம் மனதில் தோன்றும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வியாபாரத்தில் வேற்றுமொழி வாடிக்கையாளர்கள் வருவர். உத்தியோகம் சிறக்கும்.
கும்பம்: அரசு காரியங்களில் இருந்து வந்த தடைகள் விலகும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் சரக்குகள் விற்று தீரும். அலுவலகத்தில் குழப்பம் நீங்கி நிம்மதி உண்டு.
மீனம்: ஒதுங்கியிருந்த உறவினர்கள், நண்பர்கள் இனி ஓடி வந்து பேசுவர். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகமாகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் வீண் விவாதங்கள் வேண்டாம்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
18 hours ago
ஜோதிடம்
18 hours ago
ஜோதிடம்
13 hours ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago