இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: குடும்பத்தினரிடம் விட்டுக்கொடுத்து போவது நல்லது. அக்கம் பக்கத்தினரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடைவீர்கள். ஆன்மிகம், தியானம், யோகாவில் ஈடுபாடு உண்டாகும்.

ரிஷபம்: இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். தோற்றப் பொலிவு கூடும். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். தொழிலில் போட்டிகள் குறையும்.

மிதுனம்: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டி ருக்க வேண்டாம். உடல்நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள். இடையூறுகள், தடைகள் உடைபடும். எக்காரியத்திலும் பொறுமை தேவை.

கடகம்: மனப் போராட்டம் ஓயும். சமயோசிதமான பேச்சால், தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பணவரவு உண்டு. வியாபாரத்தில் போட்டிகள் நீங்கும்.

சிம்மம்: தொட்டதெல்லாம் துலங்கும். தடைகள் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் விறுவிறுப்பாக நடந்து முடிவடையும். அரசு, வங்கி காரியங்கள் உடனடியாக நிறைவேறும் .

கன்னி: நீங்கள் ஏற்கெனவே செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டு கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். வியாபாரத்தில் புது சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள்.

துலாம்: வீட்டு உபயோக பொருட்கள், மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். பழைய கடனை நினைத்து வருந்த வேண்டாம். புதுவழி பிறக்கும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர் ஆதரவு உண்டு.

விருச்சிகம்: வீண் விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். தலை சுற்றல், வயிற்றுப்போக்கு வந்து நீங்கும். தெய்வ வழிபாடு மனநிறைவை தரும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

தனுசு: சாதுர்யமாக பேசி காரியம் சாதிப்பீர்கள். உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் மனம் திருந்தி, பணத்தை திருப்பி தருவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும்.

மகரம்: உங்கள் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வீர்கள். உங்கள் ரசனைக் கேற்ப வீடு, வாகனம் அமையும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சி செய்வீர்கள்

கும்பம்: குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்கும். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். பிள்ளைகளின் ஆர்வம் படிப்பில் திரும்பும். அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.

மீனம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு, வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். ஆரோக்கியம் சீராகும். வியாபாரம் சூடுபிடிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

16 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

20 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

மேலும்