இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: அனைத்து பிரச்சினைகளையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் கிடைக்கும். நல்லவர்களின் நட்பு கிட்டும். புது தெம்பு பிறக்கும். வியாபாரத்தில் லாபம் பார்க்கலாம். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டு.

ரிஷபம்: தன்னம்பிக்கையுடன்பொது காரியங்களில் ஈடுபடுவீர். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். வியாபார ரீதியாக பிரபலங்களை சந்திப்பீர்கள் உங்களின் சேமிப்பு அதிகரிக்கும் உத்தியோகம் சிறக்கும்

மிதுனம்: குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினருடன் இருந்த மோதல்கள் விலகும். வியாபாரத்தில் சரக்குகள் விற்று தீரும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

கடகம்: உறவினர்களின் அன்புத் தொல்லை இருக்கும். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர், கெட்டவர் யார் என்பதை உணர்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

சிம்மம்: நினைத்த காரியம் நிறைவேறும். மனக்குழப்பம் நீங்கும். கல்வியாளர், அறிஞர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் மதிப்புயரும்.

கன்னி: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகமாகும். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.

துலாம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும், உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள்.

விருச்சிகம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர். தம்பதிக்குள் நெருக்கம் அதிகமாகும். வருங்காலத்துக்கான முக்கிய முடிவு எடுப்பீர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.

தனுசு: அடுத்தவர்களை குறை கூறுவதை நிறுத்துங்கள். மற்ற வர்களுக்கு நியாயம் பேசப் போய் பெயரை கெடுத்துக் கொள்ளாதீர். வியாபார விஷயமாக வெளியூர் பயணம் இருக்கும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

மகரம்: வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்வீர்கள். குடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாள்வீர். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். மதிப்பு உயரும்.

கும்பம்: சின்னச்சின்ன சந்தர்ப்பங்களை பயன்படுத்தி, காரியம் சாதிப்பீர். பெற்றோரின் ஒத்துழைப்பு உண்டு. வெளியூரிலிருந்து நல்ல செய்திவரும். வியாபாரத்தில் போட்டி குறையும். அலுவலகத்தில் பொறுப்பு கூடும்.

மீனம்: எந்தப் பிரச்சினையையும் சமாளிக்கும் பக்குவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பர். வியாபார ரீதியான பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர், அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE