இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சேமிக்கும் எண்ணம் மனதில் தோன்றும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வியாபாரத்தில் வேற்றுமொழி வாடிக்கையாளர்கள் வருவர். உத்தியோகம் சிறக்கும்.

ரிஷபம்: பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரை வழங்குவர். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும்.

மிதுனம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தாய் வழி உறவினர்களால் அலைச்சல் இருக்கும். பிள்ளைகளால் செலவு உண்டு. வியாபாரத்தில் போட்டி இருக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டு.

கடகம்: அரசு காரியங்களில் இருந்து வந்த தடைகள் விலகும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் குழப்பம் நீங்கி நிம்மதியுண்டு.

சிம்மம்: ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்களெல்லாம் இனி ஓடி வந்து பேசுவார்கள். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை கூடும்.

கன்னி: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். உத்தியோகத்தில் இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர். வியாபாரத்தில் ஏற்றம் உண்டு.

துலாம்: அவசரத்துக்கு கைமாற்றாக வாங்கியிருந்த தொகையை தந்து முடிப்பீர். தாய்வழி உறவினர் மத்தியில் கவுரவம் கூடும். வியாபாரம் விறுவிறுப்பாக அமையும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகம் சிறக்கும்.

விருச்சிகம்: வீண் அலைச்சல், காரியத் தடைகள் வரக் கூடும். வெளிவட்டாரத்தில் நிதானம் தேவை. வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்வீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்த்து, அமைதி காக்கவும்.

தனுசு: பிள்ளைகளின் பிடிவாதம் குறைந்து உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். மகளுக்கு உடனே திருமணம் கூடி வரும். வியாபாரத்தில் வராக் கடன் வந்து சேரும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.

மகரம்: வெளிவட்டாரத்தில் கவுரவ பதவிகள் தேடி வரும். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புது வேலை அமையும். அரசால் அனுகூலம் உண்டாகும். வியாபாரரீதியாக பயணம் இருக்கும். உத்தியோகம் சிறக்கும்.

கும்பம்: சோம்பல் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர். அதிகாரப்பதவியில் இருப்பவர்கள் நட்புறவாடுவார்கள். வியாபாரத்தில் புது சரக்குகளை கொள்முதல் செய்வீர். அலுவலகத்தில் புதிய பதவி கிடைக்கும். மதிப்பு உயரும்.

மீனம்: இழுபறி வேலைகளை முடிப்பீர்கள். முக்கிய பிரமுகர்களின் இல்ல விசேஷங்களில் பங்கேற்பீர். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE