மேஷம்: பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவர். வியாபாரம் சூடு பிடிக்கும்.
ரிஷபம்: வீண் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். குடும்பத் தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பிள்ளைகள் படிப்புச் செலவு இருக்கும். வியாபாரத்தில் போட்டி இருக்கும். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.
மிதுனம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சேமிக்கும் எண்ணம் மனதில் தோன்றும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வியாபாரத்தில் வேற்றுமொழி வாடிக்கையாளர்கள் வருவர். உத்தியோகம் சிறக்கும்.
கடகம்: அரசுக் காரியங்களில் இருந்து வந்த தடைகள் விலகும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் நிம்மதி கிடைக்கும்.
» ரூ.4.27 லட்சம் கோடி சந்தை மதிப்புடன் உலகின் டாப் 10 வாகன உற்பத்தி பட்டியலில் டாடா மோட்டார்ஸ்
» 7,000 அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவிங்: 102 வயதில் இங்கிலாந்து மூதாட்டி சாதனை
சிம்மம்: ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்கள் இனி ஓடி வந்து பேசுவர். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். வாகனத்தை மாற்றுவீர். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.
கன்னி: எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் வியாபாரத்தில் இருந்த தொல்லைகள் நீங்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டு. உத்தியோகத்தில் இழுபறி வேலைகளை முடிப்பீர்.
துலாம்: அவசரத்துக்கு கைமாற்றாக வாங்கியிருந்த தொகையை தந்து முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்கள் மத்தியில் கவுரவம் கூடும். வியாபாரம் விறுவிறுப்பாக அமையும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டு.
விருச்சிகம்: வீண் அலைச்சல், காரியத் தடைகள் வரக் கூடும். வெளி வட்டாரத்தில் நிதானம் தேவை. மனைவி வழி உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
தனுசு: பிள்ளைகளின் பிடிவாதம் குறைந்து உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பர். மகளுக்கு உடனே திருமணம் கூடி வரும். வியாபாரத்தில் வராக் கடன் வந்து சேரும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் கிடைக்கும்.
மகரம்: வெளிவட்டாரத்தில் கவுரவப் பதவிகள் தேடி வரும். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புது வேலை அமையும். அரசால் அனுகூலம் உண்டு. வாகன பழுது நீங்கும். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.
கும்பம்: முகத்தில் தெரிந்த சோகம் மறையும். வாகனத்தை மாற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் நட்புறவாடுவர். அலுவலகத்தில் புதிய பதவி கிடைக்கும். வியாபாரத்தில் புது சரக்குகளை கொள்முதல் செய்வீர்.
மீனம்: எடுத்த வேலையை முடிக்க போராடுவீர். முக்கிய பிரமுகர்களின் நட்பு கிடைத்து அவர்கள் வீட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பீர்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.முக்கிய செய்திகள்
ஜோதிடம்
13 hours ago
ஜோதிடம்
13 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago