இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: பழைய நண்பர்களின் வீட்டு விசேஷங்களில் பங்கேற்று நட்பை புதுப்பிப்பீர். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசவும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டு கிடைக்கும்.

ரிஷபம்: எதார்த்தமான பேச்சால் சுற்றியிருப்பவர்களை வசீகரிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.

மிதுனம்: நெடுநாளாக அடைக்க முடியாமல் இருந்த கடனை அடைக்கும் அளவுக்கு பணம் வரும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் உண்டு. அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.

கடகம்: நீண்ட நாள் கனவு நனவாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனம் வாங்குவீர். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

சிம்மம்: வீண் வறட்டு கவுரவத்துக்காக சேமிப்புகளை கரைக்க வேண்டாம். கடன் பிரச்சினை அதிகமாகும். அலுவலகத்தில் வேலைச்சுமை, திடீர் பயணங்கள் வந்து போகும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்கலாம்.

கன்னி: உற்றார் உறவினர்கள் உங்கள் வீடு தேடி வந்து பேசுவார்கள். குடும்பத்துடன் சென்று குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகம் சிறக்கும்.

துலாம்: தடைகள் உடைபடும். தம்பதிக்குள் இருந்த பனிப்போர் விலகும். பிள்ளைகளின் எதிர்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டு.

விருச்சிகம்: உங்களிடம் நட்புடன் இருந்தபடியே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை கண்டறிந்து ஒதுக்குவீர். வியாபாரரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும்.

தனுசு: நீண்ட நாட்களாக தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் கைகூடி வரும். பிள்ளைகள் மனம் விட்டுப் பேசுவர். பண விஷயத்தில் கறாராக இருப்பீர். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரம் சிறக்கும்.

மகரம்: புதிய சிந்தனையால் சில பிரச்சினைகளை முடிப்பீர். நண்பர், உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.

கும்பம்: எடுத்த வேலையை போராடி முடிப்பீர்கள். மனைவிவழியில் விட்டுக் கொடுத்து போகவும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களின் ஆலோசனையை கேட்டு நடக்கவும். அலுவலகத்தில் புதிய பதவி கிடைக்கும்.

மீனம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். வீடு, வாகன பராமரிப்பு செலவு இருக்கும். தொழிலில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் இருந்த குழப்பங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE