மேஷம்: குடும்பத்தில் நிலவிய காரசாரமான விவாதங்கள் மறையும். பிள்ளைகளால் மரியாதை, அந்தஸ்து உயரும். நல்லவர்கள் நட்பு கிடைக்கும். உத்தி யோகத்தில் உயர் அதிகாரி நேசக்கரம் நீட்டுவார்.
ரிஷபம்: நெடுநாட்களாக தடைபட்ட காரியங்கள் சுமுகமாக முடியும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். சொந்த பந்தங்கள் மத்தியில் மதிப்பு கூடும். பேச்சில் பொறுமை தேவை.
மிதுனம்: கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும். வெளி வட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தள்ளிப்போன காரியங்கள் முடியும். தொழிலில் போட்டி குறையும்.
கடகம்: வீண் குழப்பங்கள், திடீர் பயணம், அலைச்சல், அசதி அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் நிதானமாக முடிவெடுப்பது நல்லது. நாடி வந்தவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்வீர்கள்.
» மோசடி புகாரில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் வீடு, அலுவலகம் உட்பட12 இடங்களில் போலீஸார் சோதனை
» பெண் மருத்துவர் கொலை குறித்து தாமாக முன்வந்து வழக்கு பதிவு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை
சிம்மம்: புதியவர்களின் நட்பு கிடைக்கும். தள்ளிப்போன வழக்கில் சாதகமான திருப்பம் உண்டாகும். அரசு, வங்கி காரியங்கள் விரைந்து முடியும். புதியவர்கள் அறிமுகத்தால் அனுகூலம் உண்டாகும்.
கன்னி: பழைய பிரச்சினைக்கு சுமுக தீர்வு கிடைக்கும். அதிகார பதவியில் இருப்பவர்களுடன் அறிமுகம் உண்டாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.
துலாம்: விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள்.
விருச்சிகம்: புதியவர்கள் நட்பால் ஆதாயம் உண்டு. பண வரவு திருப்திகரமாக இருக்கும். கொடுக்கல் - வாங்கலில் சுமுக நிலை காணப்படும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களால் சரக்குகள் விற்று தீரும்.
தனுசு: வீண் அச்சம், கவலை, சஞ்சலம் ஓயும். சமயோசித பேச்சால், தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பண வரவு உண்டு. வியாபாரத்தில் போட்டி நீங்கும்.
மகரம்: பழைய சம்பவங்களை நினைத்து வருந்த வேண்டாம். குடும்பத்தில் வீண் வாக்குவாதம் தோன்றி மறையும். திடீர் பயணத்தால் அலைச்சல், செலவு ஏற்படும். வியாபாரத்தில் லாபம் உண்டு.
கும்பம்: தொட்ட காரியங்கள் துலங்கும். தடைகள் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். அரசு, வங்கி வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். ஆன்மிகம், தியானத்தில் நாட்டம் ஏற்படும்.
மீனம்: நடந்து முடிந்த கசப்பான சம்பவங்களை பேச வேண்டாம். உடல்நலத்தில் அதிக கவனம் தேவை. தடைகள் உடைபடும். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது. பல வகையிலும் பொருட்கள் சேரும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
6 days ago