இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: சமயோஜித புத்தியுடன் பல காரியங்களை முடித்துக் காட்டுவீர். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகமாகும். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் குழப்பம் தீர்ந்து நிம்மதி பிறக்கும்.

மேஷம்: விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்துக் கொள்வீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

மிதுனம்: எடுத்த வேலையை முடிக்க போராட வேண்டும். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பேசி பழகுவது நல்லது. வியாபாரத்தில் குழப்பங்கள் வரும். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். விவாதம் தவிக்கவும்.

கடகம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். பணம் புரளும். அலுவலகரீதியாக இருந்து வந்த சின்ன சின்ன குழப்பங்கள் தீரும். வியாபாரம் சூடு பிடிக்கும்.

சிம்மம்: கையில் பணம் புரளும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவர். நீண்ட நாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.

கன்னி: முன்கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவர். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

துலாம்: அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவர். அரசால் ஆதாயம் உண்டு. முன்கோபத்தை குறைப்பீர். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் உங்கள் மதிப்பு உயரும்.

விருச்சிகம்: கணவன் - மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர். முன் கோபம் விலகும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள்.

தனுசு: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. இழுபறி வேலைகளை முடிக்க போராடுவீர். வியாபாரத்தில் நிதானம் தேவை. அலுவலகரீதியான பயணம் அலைச்சல் தரும். வீண் விவாதம் வேண்டாம்.

மகரம்: பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். மனவலிமையுடன் அனைத்தையும் முடித்து காட்டுவீர். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். வியாபாரம் சூடு பிடிக்கும்.

கும்பம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர். உறவினர். நண்பர்களால் ஆதாயம் உண்டு. கூட்டுத் தொழில் பங்குதாரர்களுடன் இருந்த குழப்பம் நீங்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.

மீனம்: நம்பிக்கைக்கு உரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர். குடும்பத்தில் நிம்மதியுண்டு. வியாபாரத்தில் பழைய பணியாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகரீதியாக திடீர் பயணங்கள் மேற்கொள்வீர்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE