இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: பிரபலங்களை சந்திப்பதால் மனநிறைவு கிட்டும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும்.

ரிஷபம்: அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆதரவு கிட்டும். கணவன்- மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சேமிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

மிதுனம்: கனிவாகப்பேசி காரியம் சாதிப்பீர்கள் பிள்ளைகளின் பெருகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் கிடைக்கும்.

கடகம்: குடும்பத்தில் இருந்து வந்த குழப்பம் நீங்கும். வியாபாரத்தில் விஜபிகள் வாடிக்கையாளர்களாவார்கள். பங்குதாரர்களின் ஆதரவு உண்டு. அலுவலகத்தில் அனைவரும் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வர்.

சிம்மம்: மற்றவர்களால் பயனில்லாமல் போனதால் நீங்களே சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வியாபார ரீதியாக வெளியூர் செல்வீர் அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

கன்னி: தள்ளிப் போன வேலைகளை முடிப்பீர்கள். பணப் புழக்கம் அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் நிம்மதியுண்டு. சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.

துலாம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். கோபத்தை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க போராடுவீர் அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும்.

விருச்சிகம்: உங்களை தவறாக நினைத்து கொண்டிருந்த உறவினர்கள், நண்பர்களின் எண்ணம் மாறும். வீட்டில் மகிழ்ச்சி பொங்கும் உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டு கிட்டும். கூட்டுத் தொழிலில் லாபமுண்டு.

தனுசு: துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பர். வியாபாரத்தில் போட்டியை சமாளித்து லாபமீட்டுவீர். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

மகரம்: வருமென நினைத்திருந்த பணம் வந்து சேரும். மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். பிள்ளைகளால் நிம்மதியுண்டு. வியாபாரத்தில் பாக்கிகளை வசூலிப்பீர் அலுவலகத்தில் உங்கள் மதிப்பு உயரும்.

கும்பம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர். பிள்ளைகளின் உடல் நலம் சீராகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

மீனம்: குடும்பத்தினரின் ஆதரவு உண்டு. புதிய வாகனம் வாங்குவீர். ஆரோக்கியத்தை கவனிக்கவும். வீண் விவாதம் தவிர்க்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை உண்டு. வியாபார ரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE