மேஷம்: குடும்பத்தில் அமைதி திரும்பும். வெளிநாட்டு பயணத்துக்கான விசா கிடைக்கும். வேற்றுமதத்தினர் உதவுவார். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.
ரிஷபம்: வீட்டில் கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். பூர்வீக வீட்டை விரிவுபடுத்துவீர். வியாபாரம் திருப்திகரமாக அமையும். அலுவலகத்தில் உங்கள் மதிப்பு உயரும்.
மிதுனம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர். தாயாரின் உடல்நிலை சீராகும். உறவினர், நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். பிள்ளைகளால் பெருமையுண்டு. வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.
கடகம்: பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கான மாற்று வழியைகண்டறிவீர். குடும்பத்தில் உங்க கை ஓங்கும். முகப் பொலிவு, ஆரோக்கியம் கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். வியாபாரம் லாபம் தரும்.
» நீரஜ் சோப்ராவுக்கு வெள்ளிப் பதக்கம்: பாக். வீரர் அர்ஷத் தங்கம் வென்று சாதனை @ ஒலிம்பிக்
» ஐமேக்ஸில் வெளியாகிறது விஜய்யின் ‘தி கோட்’ - ரசிகர்கள் உற்சாகம்
சிம்மம்: பிரபலங்களின் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்கும் அளவுக்கு நெருக்கமாவீர். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழிலில் எதிராக செயல்பட்ட பணியாட்களை மாற்றுவீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
கன்னி: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். முன்கோபம், காரியத் தடை வரக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்கள் தொல்லை தருவார்கள். அலைச்சல் இருக்கும். அலுவலகத்தில் வீண் விவாதம் வேண்டாம்.
துலாம்: வெளிப்படையான பேச்சால் சில காரியங்களை முடித்து காட்டுவீர். எதிலும் மகிழ்ச்சி கிட்டும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வியாபாரம் சிறக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.
விருச்சிகம்: வெளியூரிலிருந்து மனதுக்கு இதமான செய்தி வரும். உடல் சோர்வு, வயிற்றுவலி சீராகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாக செயல்படவும்.
தனுசு: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர். வியாபாரத்தை விரிவுபடுத்த சில முக்கிய நபர்களை சந்திப்பீர்கள். அலுவலகரீதியான பிரச்சினைகள் ஓயும்.
மகரம்: வீட்டில் நவீன மின் சாதனங்களை வாங்குவீர். மனைவி வழியில் பண உதவி கிட்டும். வாகனப் பழுது நீங்கும். வியாபாரரீதியாக வெளியூர் பயணம் இருக்கும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் கிடைக்கும்.
கும்பம்: வெளிவட்டாரத்தில் உங்கள் மதிப்பு உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அலுவலகத்தில் முக்கிய பதவிக்கு தேர்வு செய்யப்படுவீர். வியாபாரம் சூடு பிடிக்கும்.
மீனம்: பண விஷயத்தில் கவனம் தேவை. தம்பதிக்குள் விட்டுக் கொடுத்துப் போகவும். வியாபாரத்தில் போட்டி இருக்கும். வெளியூர் பயணங்கள் அலைச்சல் தரும். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்க்கவும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago