இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: புது திட்டங்களை தீட்டுவீர்கள். உறவினர், நண்பர்கள் தேடி வருவார்கள். தாயாருக்கு இருந்து வந்த மருத்துவ செலவு குறையும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.

ரிஷபம்: வெளிவட்டாரத் தொடர்பு விரிவடையும். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் பெறுவீர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

மிதுனம்: பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். பூர்வீக சொத்து பிரச்சினை முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர். விவாதங்களை தவிர்க்கவும்.

கடகம்: இங்கிதமாகப் பேசி சுற்றியிருப்பவர்களை கவருவீர். பிரபலங்களால் ஆதாயமுண்டு. வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் குறை கூறாதீர்கள்.

சிம்மம்: தைரியமாக சில முக்கிய முடிவு எடுப்பீர்கள். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பர். பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மேன்மையுண்டு.

கன்னி: யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வரும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆலோசனையை கேட்டு நடக்கவும்.

துலாம்: குடும்பத்தாரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர். தந்தை வழியில் இருந்து வந்த மனஸ்தாபங்கள் விலகும். அலுவலகத்தில் உயரதிகாரிகள் உங்கள் ஆலோசனையை கேட்டு நடப்பர். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும்.

விருச்சிகம்: எதிர்பார்த்தபடி சில வேலைகள் முடியும். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவீர். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

தனுசு: உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்களை கண்டறிவீர். எடுத்த வேலைகளை விரைந்து முடிப்பீர். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் இருந்து வந்த பனிப்போர் விலகும். வியாபாரரீதியாக பயணம் உண்டு.

மகரம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு முக்கிய வேலைகளை முடிப்பீர்கள். சொந்த ஊரிலிருந்து நற்செய்திகள் வரும். வியாபாரத்தில் பாக்கிகள் வந்து சேரும். அலுவலகத்தில் உங்கள் மீது இருந்த வீண் பழி அகலும்.

கும்பம்: எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் கூட இழுபறியாகும். வீட்டில் அமைதி காக்கவும். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பழகவும்.வியாபாரத்தில் சிக்கல் வரக் கூடும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

மீனம்: வீட்டில் விலையுயர்ந்த அலங்காரப் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்குவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டி விலகும். அலுவலகத்தில் மேலதிகாரி ஆதரவாக இருப்பார்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE