இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் மறையும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி நேசக்கரம் நீட்டுவார். வியாபாரம் சிறக்கும்.

ரிஷபம்: புதியவர்கள் நண்பர்களாவார்கள். கொடுக்கல் - வாங்கலில் சுமுகமான நிலை தென்படும்.வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்களால் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் உங்கள் மீது இருந்த வீண் பழி அகலும்.

மிதுனம்: கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தொழிலில் போட்டிகள் குறையும். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

கடகம்: குடும்பத்தில் வீண் விவாதங்கள் வந்து போகும். தாயாரின் உடல்நிலை சீராகும். பயணங்கள் அலைச்சல் தரும். வியாபாரத்தில் அவசர முடிவு எடுக்க வேண்டாம். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் அமைதி காக்கவும்.

சிம்மம்: வெளிவட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.

கன்னி: பழைய பிரச்சினைக்கு புது தீர்வு கிடைக்கும். அதிகாரப்பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவர். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

துலாம்: விருந்தினர் வருகை அதிகரிக்கும். சகோதரர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். அலுவலகத்தில் புதிய பதவி கிடைக்கும்.

விருச்சிகம்: மனக் குழப்பம் தீரும். சமயோஜிதமான பேச்சால் தடைபட்ட வேலைகளை முடிப்பீர். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். வியாபாரத்தில் போட்டிகள் நீங்கும். அலுவலகத்தில் உங்க கை ஓங்கும்.

தனுசு: வீண் குழப்பங்கள், அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் நிதானம் தேவை. புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். அலுவலகத்தில் அடுத்தவரை பற்றி குறை கூட வேண்டாம்.

மகரம்: மின்சார சாதனங்களை மாற்றி அமைக்கும் முயற்சிகளில் இறங்குவீர். பழைய கடனைத் தீர்க்க புதுவழி பிறக்கும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களின் ஆதரவு உண்டு. அலுவலகத்தில் பொறுப்புகள் கூடும்.

கும்பம்: தொட்டதெல்லாம் துலங்கும். தடைகள் நீங்கும். இழுபறியாக இருந்து வந்த வேலை முடியும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களும் உடனடியாக நிறைவேறும். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.

மீனம்: பழைய சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். உடல் நலத்தை கவனிப்பது அவசியம். தடைகள் உடைபடும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும். அலுவலகத்தில் அமைதி காப்பது நன்மை தரும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்