இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: மனக்குழப்பம் நீங்கும். நினைத்த காரியம் நிறை வேறும். கல்வியாளர், அறிஞர்களின் நட்பால் தெளி வடைவீர். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி ஏற்பாடாகும். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

ரிஷபம்: மனப் போராட்டம், ஒருவித பயம் இருக்கும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகவும். வியாபாரத்
தில் பங்குதாரர்களை அனுசரித்து நடந்து கொள்ள வும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

மிதுனம்: ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பங்குதார்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும்.

கடகம்: சவால்கள், ஏமாற்றங்களை கடந்து வெற்றி அடைவீர் கள். தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. பழைய கடனை பைசல் செய்யும் அளவுக்கு பணவரவு உண்டு. வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.

சிம்மம்: உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். உடன் பிறந்தவர்கள் வகையில் நன்மை பிறக்கும். உற்சாகமான பேச்சால் வாடிக்கையாளர்களை கவரு வீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.

கன்னி: தொட்டது துலங்கும். தெளிவு பிறக்கும். அனுபவப் பூர்வமாகப் பேசுவீர். பழைய கடனை பைசல் செய்ய வழி பிறக்கும். பங்குதாரர் உங்கள் வார்த்தைக்கு மதிப்பளிப்பார். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

துலாம்: சேமிப்புகள் கரையக் கூடும். கணவன் மனைவி பிரச்சினைக்குள் மற்றவர்களை நுழைய விடாதீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் செலுத்துங்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் உண்டு.

விருச்சிகம்: பழைய பள்ளி, கல்லூரி நண்பர்கள் வீடு தேடி வந்து பேசுவார்கள். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படு வார்கள். வியாபாரத்தில் போட்டி விலகும். உத்தி யோகம் தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பீர்கள்.

தனுசு: எண்ணங்கள் ஈடேறும். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். வியாபாரரீதியாக பெரிய மனிதர்களை சந்திப்பீர். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும்.

மகரம்: உங்களின் புகழ், கவுரவம் உயரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பணவரவு உண்டு. கலை பொருட்கள் வாங்குவீர். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

கும்பம்: வியாபாரரீதியாக சிலரை சந்திப்பீர்கள். கடந்த கால சுகமான அனுபவங்கள், சாதனைகளை நினைத்து மகிழ்வீர். குடும்பத்தில் வீண் விவாதம் வேண்டாம். அலுவலகத்தில் புதிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்.

மீனம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். புதிய சிந்தனைகள் தோன்றும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். வாகனத்தை மாற்றுவீர். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்