மேஷம்: அடுக்கடுக்காக இருந்துவந்த செலவுகள் இனி குறையும். சவாலான காரியங்களையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரரீதியாக பிரபலங்களின் உதவியை நாடுவீர்கள். வெளியூர் பயணம் உண்டு.
ரிஷபம்: எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கறாராகப்பேசி காரியங்களை சாதிப்பீர்கள். சேமிக்கும் அளவுக்கு வருவாய் அதிகரிக்கும். பழுதான மின்சாதனங்களை மாற்றுவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.
மிதுனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். எதிர்பார்த்த விலைக்கே பழைய சொத்தை விற்பீர்கள். பெரிய மனிதர்கள், வெற்றி பெற்றவர்களின் நட்பு கிடைக்கும். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.
கடகம்: இன்று மாலை 6.15 மணி வரை சந்திராஷ்டமம் ஆயில்யத்தில் இருப்பதால் குடும்பத்தாருடன் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் அலைந்து திரிந்து பாக்கிகளை வசூலிப்பீர்கள்.
» பிரதமர் தலைமையில் நடக்க உள்ள நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறேன்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சிம்மம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு. சில வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். மாலை 6.15 மணி முதல் சந்திராஷ்டமம் மகத்தில் தொடர்வதால் தலைச்சுற்றல், மனச்சோர்வு வரக்கூடும். எதிலும் நிதானமுடன் செயல்படுங்கள்.
கன்னி: பழைய நினைவுகளில் அடிக்கடி மூழ்குவீர்கள். சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரி நேசக்கரம் நீட்டுவார்.
துலாம்: சொந்தபந்தங்களிடையே மதிப்பு, மரியாதை கூடும். தந்தைவழி சொத்துகள் கைக்கு வரக்கூடும். மூத்த சகோதர சகோதரிகள் தக்கசமயத்தில் உதவி செய் வார்கள். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.
விருச்சிகம்: புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசு காரியங்களில் இருந்துவந்த இழுபறி நீங்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள்.
தனுசு: புதியவர்கள் அறிமுகமாவார்கள். வரவேண்டிய பணமெல்லாம் கைக்கு வரும். வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.
மகரம்: நீண்டநாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணம் இன்று கைக்கு வரும். வீட்டில் பழுதான பொருட்களை மாற்றிவிட்டு புதிய பொருட்களால் அலங்கரிப்பீர்கள். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை கூடும்.
கும்பம்: சந்திரன் இன்று மாலை 6.15 மணி வரை அவிட்டத்திலும், அதன்பிறகு சதயத்திலும் தொடர்வதால் முன்கோபம், அலைச்சல் இருக்கும். பிள்ளைகளின் உடல் நிலையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
மீனம்: சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago