மேஷம்: சாமர்த்தியமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டு. மதிப்பு உயரும்.
ரிஷபம்: உங்கள் பேச்சை அனைவரும் ரசிப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர். வியாபாரம் சூடு பிடிக்கும்.
மிதுனம்: பேச்சிலும், செயலிலும் கவனம் தேவை. முடிவெடுப்பதில் தடுமாற்றம் வரும். குடும்பத்தினரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும்.
கடகம்: மனதில் இருந்த தேவையில்லாத பயம் விலகும். திடீர் பணவரவு உண்டு. வியாபாரத்துக்காக புது வாகனம் வாங்குவீர். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.
சிம்மம்: சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர். மனைவிவழி உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.
கன்னி: எதிர்பாராத பணவரவால் மனமகிழ்ச்சி உண்டு. உறவினர், நண்பர்கள் ஆதரவாக பேசத் தொடங்குவர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் சக ஊழியரிடம் இணக்கமான போக்கை கடைபிடிக்கவும்.
துலாம்: பழைய நல்ல நினைவுகளில் மூழ்குவீர். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
விருச்சிகம்: விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர்கள். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர். அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
தனுசு: முன்கோபம், வீண் அலைச்சல் வரக் கூடும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகவும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டு.
மகரம்: மறதியால் பிரச்சினை வந்து நீங்கும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். சாலைகளை கவனமாக கடந்து செல்லவும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர்.
கும்பம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர். மனதுக்கு பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர். உடல் ஆரோக்கியம் திருப்தி தரும். வியாபாரத்தில் லாபம் உண்டு. புதிய பதவி கிடைக்கும்.
மீனம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டு. உறவினரால் மனநிம்மதி கிட்டும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு உண்டு.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago