இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: குடும்பத்தில் நிலவி வந்த குழப்பம் மறையும். பிள்ளை களால் பெருமை அடைவீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரம் சூடு பிடித்து லாபமுண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரி நேசக்கரம் நீட்டுவார்.

ரிஷபம்: மனதுக்குள் குழப்பம் இருப்பதால் எந்த வேலை யையும் முடிக்க முடியாமல் திணருவீர்கள். வியாபாரத் தில் அவசரம் வேண்டாம். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் வீண் விவாதங்களை தவிர்க்கவும்.

மிதுனம்: கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். தொழிலில் போட்டிகள் குறையும். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.

கடகம்: புதியவர்களின் நட்பு கிடைக்கும். கொடுக்கல் - வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். வியாபாரம் சூடு பிடித்து புது வாடிக்கையாளர்களால் சரக்கு விற்றுத் தீரும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.

சிம்மம்: வெளிவட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். இழுபறி வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு. பணவரவு திருப்தி தரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும்.

கன்னி: பழைய பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். அதிகாரப்பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்தி வரும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

துலாம்: வீட்டில் விருந்தினர் வருகை அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு உண்டு. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் இணைந்து செயல்படுவது நல்லது.

விருச்சிகம்: மனப் போராட்டங்கள் ஓயும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். சமயோஜிதமான பேச்சால் தடைபட்ட வேலைகளை முடிப்பீர். வியாபாரத்தில் போட்டி நீங்கும். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும்.

தனுசு: வீண் குழப்பங்கள், அலைச்சல் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போகவும். வியாபாரத்தில் பாக்கிகளை நிதானமாக வசூலிக்கப் பாருங்கள். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் உண்டு.

மகரம்: மின்சார சாதனங்களை மாற்றி அமைக்கும் முயற்சிகளில் இறங்குவீர். கடனை தீர்க்க புதுவழி பிறக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆதரவு உண்டு. அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.

கும்பம்: தொட்டதெல்லாம் துலங்கும். தடைகள் நீங்கும். இழு பறியாக இருந்து வந்த வேலை இனிதே முடிவடையும். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு. புதிய பதவி கிடைத்து பொறுப்புகள் கூடும்.

மீனம்: புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவல கத்தில் அமைதி காப்பது நல்லது.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE