இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு அமையும். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர். வியாபாரத்தில் புதிய பங்குதாரர் கிடைப்பார். அலுவலகத்தில் உங்கள் மீதான வீண் பழி விலகும்.

ரிஷபம்: தடைபட்டிருந்த காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் நல்ல தீர்வு காண்பீர். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிட்டும்.

மிதுனம்: வெளிவட்டாரத் தொடர்பால் சில பணிகளை முடிப்பீர். குடும்பத்தினருடன் குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். வியாபார ரீதியாக வெளியூர் செல்ல வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

கடகம்: முகப் பொலிவுடன் காணப்படுவீர். முடியாமல் போன சில காரியங்களை முடிப்பீர்கள். தம்பதிக்குள் சந்தோஷம் நிலைக்கும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் உண்டு அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர்.

சிம்மம்: தம்பதிக்குள் வீண் விவாதங்கள் விலகும். வெளியூர் பயணங்கள் திருப்தி தரும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர். புதிய தொழில் தொடங்குவீர். ஓரளவு லாபமுண்டு. அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

கன்னி: மனநிறைவுடன் காணப்படுவீர். குடும்பத்தில் அனுசரித்துப் போவீர். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் சக ஊழியர் மத்தியில் மதிப்பு உயரும்.

துலாம்: உடல்நலக்குறைவு, மனச் சோர்வு வரக் கூடும். திட்டமிட்டபடி வேலைகளை முடிக்க முடியாமல் திணருவீர். வியாபாரத்தில் ஓரளவு லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் உங்கள் ஆலோசனை ஏற்கப்படும்.

விருச்சிகம்: மறைமுக போட்டிகளுக்கு பதிலடி தருவீர். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

தனுசு: வீட்டில் தள்ளி போய் கொண்டிருந்த சுபகாரியம் கூடி வரும். பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்வீர். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டு.

மகரம்: சுறுசுறுப்புடன் செயல்படுவதன் மூலம் காரியம் வெற்றியடையும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

கும்பம்: பேச்சில் கம்பீரம் பிறக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் புதிய பதவி கிடைத்து பொறுப்புகள் கூடும். அந்தஸ்து உயரும்.

மீனம்: வாழ்க்கையைப் பற்றிய கவலைகள் மனதை வாட்டும். தியானம் செய்யவும். செலவுகள் கையிருப்பை குறைக்கும். வியாபாரத்தில் நிதானமாக செயல்படுவது நல்லது. அலுவலகத்தில் வேலைப் பளு அதிகரிக்கும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE