மேஷம்: எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் சுற்றி இருப்பவர்களின் நன்மதிப்பை பெறுவீர். வியாபாரத்தில் பங்குதாரர்கள் வளைந்து கொடுத்து போவர். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.
ரிஷபம்: ஆளுமைத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் உங்கள்கை ஓங்கும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். உத்தியோகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். பொறுப்புகள் அதிகரிக்கும்.
மிதுனம்: பிள்ளைகள் பொறுப்பு உணர்ந்து நடந்து கொள்வர். உங்களின் உதவியை நாடி பழைய நண்பர்கள் வருவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
கடகம்: உறவினர்களுடன் இருந்து வந்த மனஸ்தாபம் விலகும். பிள்ளைகளின் பாசம் அதிகரிக்கும். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர். அலுவலகத்தில் உங்களின் அருமை புரியும். வியாபாரம் சூடு பிடிக்கும்.
சிம்மம்: சாமர்த்தியமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.
கன்னி: எதிர்பாராத அலைச்சல், செலவு வரக் கூடும். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமை அடைவீர்கள் வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர். அலுவலகத்தில் நீங்கள் தேடிய ஆவணம் கிடைக்கும்.
துலாம்: புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வேற்று மதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் நல்ல லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார்.
விருச்சிகம்: பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர் . வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் கிடைப்பார்கள். உத்தியோகத்தில் உங்களின் பணி சிறப்பாக இருக்கும்.
தனுசு: பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர். பிரபலங்களின் நட்பு கிட்டும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
மகரம்: பால்ய நண்பர்களுடன் எதிர்பாராத சந்திப்பு நிகழும். சகோதரர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். வியாபாரத்தை விரிவுபடுத்த புது முயற்சி எடுப்பீர்கள். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்க்கவும்.
கும்பம்: வீட்டில் தள்ளிப் போய் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிக்கு தேதி குறிப்பீர். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் புதிய பதவி கிடைத்து பொறுப்பு கூடும்.
மீனம்: சகோதர வகையில் வீண் செலவு, அலைச்சல் வரும். அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு. வழக்கு சாதகமாகும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago