இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: மறைமுகமாக செயல்பட்டவர்களை கண்டறிந்து ஒதுக்குவீர். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு ஆதரவு கூடும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உண்டு.

ரிஷபம்: இழுபறியாக இருந்து வந்த வேலை முடியும். தந்தையின் உடல்நிலை சீராகும். அரசு தொடர்பான காரியங்கள் சாதகமாகும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

மிதுனம்: மன தைரியம் பிறக்கும். வருங்காலம் பற்றிய பயமும் விலகும். பணப் பிரச்சினையை சமாளிக்க வழி கிடைக்கும். வியாபாரத்தில் முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவர். அலுவலகத்தில் பணிச் சுமை குறையும்.

கடகம்: எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் பங்கேற்பீர். திருமண பேச்சுவார்த்தைகள் சுபமாக முடிவடையும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

சிம்மம்: குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிட்டும். பிள்ளைகளின் சாதனைகளால் மகிழ்ச்சி உண்டு. வியாபாரத்தில் பணியாட்கள் ஒத்துழைப்பு தருவார்கள். அலுவலகத்தில் மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்.

கன்னி: திட்டமிடப்பட்ட வேலைகள் தடைபட்டு முடியும். தந்தையுடன் இருந்த கருத்துமோதல் விலகும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போட்டி இருக்கும். அலுவலகத்தில் விவாதம் தவிர்ப்பீர்.

துலாம்: கைமாற்றாக கேட்டிருந்த பணம் கிடைக்கும். சொத்துப்பிரச்சினைகள் தீரும். முக்கிய பிரமுகர்களின் வீட்டு விசேஷங்களில் பங்கேற்பீர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும்.

விருச்சிகம்: குடும்ப பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முயற்சிப்பீர். பணவரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் மேலதிகாரி நேசக்கரம் நீட்டுவார். வியாபாரரீதியாக பயணம் மேற்கொள்ள நேரிடும். சரக்குகள் விற்று தீரும்.

தனுசு: உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். பிள்ளைகளிடம் குவிந்து கிடக்கும் திறமைகளை கண்டறிந்து வளர்ப்பீர். வியாபாரத்தில் லாபம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

மகரம்: சவாலான காரியங்களையும் செய்து முடிப்பீர். குழப்பங்கள் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பணவரவு உண்டு. வியாபாரத்தில் புதிய பங்குதாரர் கிடைப்பார். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.

கும்பம்: சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. எடுத்த வேலையை முடிக்க போராடுவீர். வியாபாரத்தில் ஓரளவுலாபமுண்டு. அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். பொறுப்புகள் அதிகரிக்கும்.

மீனம்: பிரபலங்களின் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்பர். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE