இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் - மனைவிக்குள் இருந்து வந்த பனிப்போர் மறையும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் அடைவீர். அலுவலகத்தில் உங்களின் மதிப்பு, மரியாதை கூடும்.

ரிஷபம்: குடும்பத்தில் நிலவி வந்த குழப்பம் விலகும். பணவரவு திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர். உத்தியோகத்தில் மேலதிகாரி, சக ஊழியர்கள் உங்களை பாராட்டுவர்.

மிதுனம்: தம்பதிக்குள் சின்னச் சின்ன கருத்துமோதல் வரக் கூடும். பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டுங்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை வசூலிப்பீர். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

கடகம்: அடிமனதிலிருந்து வந்த தாழ்வு மனப்பான்மை நீங்கும். செலவுகளை தவிர்த்து சேமிக்கத் தொடங்குவீர். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். முன்கோபம் வரும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

சிம்மம்: எடுத்த வேலையை திறம்பட செய்து முடிப்பீர். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் உங்கள் மீதான வீண் பழி அகலும்.

கன்னி: கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த திட்டமிடுவீர். அலுவலகத்தில் நீங்கள் தேடிய ஆவணம் கிடைக்கும்.

துலாம்: முகமலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். வீண் விவாதங்கள் விலகும். ஆடை, ஆபரணம் சேரும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு உண்டு. வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி மதிப்பார்.

விருச்சிகம்: பழைய உறவினர்கள் தேடி வருவார்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

தனுசு: வீண் அலைச்சல், விரயச் செலவுகள் வரக்கூடும். குடும்பத்தில் விட்டு கொடுத்து போவது நல்லது. உத்தியோகத்தில் நீங்கள் விரும்பிய இடத்துக்கு மாற்றல் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்பீர்.

மகரம்: பழைய வழக்குகளை இப்போது பேசித் தீர்ப்பீர். பணவரவால் மனநிம்மதி உண்டு. பங்குதாரருடன் இணைந்து வியாபாரத்தை விரிவுபடுத்த முற்படுவீர்கள். அலுவலகத்தில் தொல்லை தந்த அதிகாரி பணிவார்.

கும்பம்: தேங்கிக் கிடந்த வேலைகள் இன்று முடியும். தந்தையுடன் இருந்து வந்த பனிப்போர் விலகும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர். பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில் மேன்மையுண்டு.

மீனம்: தள்ளிப் போய் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிக்கு நாள் குறிப்பீர். பணவரவு உண்டு. முன்கோபத்தை தவிர்ப்பீர். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE