மேஷம்: திடீர் வெளியூர் பயணம் மற்றும் உறவினர்கள் வருகையால் வீண் செலவுகள், அலைச்சல், அசதி வரக்கூடும். தொழில், வியாபாரத்தில் நிதானம் தேவை. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.
ரிஷபம்: எதிர்பாராத இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். வெளி வட்டாரத்தில் மரியாதை, அந்தஸ்து உயரும். பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள்.
மிதுனம்: பண வரவு திருப்திகரமாக இருக்கும். சகோதர வகையில் மனநிம்மதி கிடைக்கும். தாய் உடல்நலம் சீராகும். வீண் அலைச்சல் குறையும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் நிம்மதி உண்டு.
கடகம்: உங்கள் நட்பு வட்டம் விரிவடையும். பழைய வாகனத்தை மாற்றிவிட்டு, புதிதாக வாங்குவீர்கள். வீடு, வாகனம் வாங்க கடன் உதவி கிடைக்கும். அரசு, வங்கி காரியங்கள் நல்லபடியாக முடியும்.
» அம்மாவின் பெயரில் மரக்கன்று நடுங்கள்: ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அழைப்பு
» அமர்நாத் குகை கோயிலில் முதல் நாளில் 14,000 பக்தர்கள் பனிலிங்க தரிசனம்
சிம்மம்: குடும்பத்தினருடன் மனம்விட்டு பேசுவீர்கள். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். உத்யோகத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். வாகனப் பழுது நீங்கும்.
கன்னி: புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பழுதான வீட்டு உபயோகப் பொருட்களை மாற்றிவிட்டு புதிதாக வாங்குவீர்கள். பிள்ளைகளால் நிம்மதி உண்டு. தொழிலில் பழைய பாக்கிகள் வந்துசேரும்.
துலாம்: எதிர்பார்த்த உதவிகள், வாய்ப்புகள் சற்று தாமதமாகும். பேச்சில் நிதானம் தேவை. வியாபாரத்தில் போட்டி இருந்தாலும் திறமையாக சமாளிப்பீர்கள். வாகன பயணத்தில் அதிக கவனம் தேவை.
விருச்சிகம்: சொந்த பந்தங்கள் வருகையால் வீட்டில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகள் உடல்நிலை சீராகும். அரசு அதிகாரிகள் உதவிகரமாக இருப்பார்கள். அலுவலகத்தில் சுமுக நிலை உருவாகும்.
தனுசு: தடைபட்ட வேலையை உங்கள் வித்தியாசமான அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சில சிக்கல்களுக்கு உங்கள் அவசர முடிவுதான் காரணம் என்பதை உணர்வீர்கள். வெளி உணவு வேண்டாம்.
மகரம்: எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு பார்ப்பீர்கள். குடும்பத்தில் அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும்.
கும்பம்: வீட்டில் தடைபட்டுக் கொண்டிருந்த சுபகாரியங்கள் ஏற்பாடாகும். ஆன்மிகப் பெரியோர்களின் ஆசி கிடைக்கும். பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். பொது காரியங்களில் ஈடுபாடு கூடும்.
மீனம்: வெளி வட்டாரத்தில் மரியாதை, அந்தஸ்து கூடும். சகோதர வகையில் அனுகூலம் உண்டு. கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
32 mins ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
23 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago