பொதுப்பலன்: வாகனம் விற்க, ரகசிய ஆலோசனைகள் நடத்த, பழைய வீட்டை புதுப்பிக்க, ஆயுர்வேதம் கற்றுக் கொள்ள நல்ல நாள். செவ்வாய் பகவானுக்கு பால் அபிஷேகம், செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்தால் தடைகள் விலகும். ராகு காலத் தில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதால் எண்ணங்கள் நிறைவேறும். கந்த சஷ்டி கவசம் படிப்பதால் அனைத்திலும் வெற்றி கிட்டும்.
மேஷம்: எளிதில் முடித்து விடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் முடியும். பிள்ளைகளின் நடவடிக்கையை கவனியுங்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் எதிர்பார்க்கலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள்.
ரிஷபம்: கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். சகோதர வகையில் இருந்து வந்த அலைச்சல் விலகும். புது வேலை அமையும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். பங்குதாரர்கள் ஆதரவு தருவார்கள். அலுவலகத்தில் தேவையற்ற விவாதங்கள் வேண்டாம்.
மிதுனம்: குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வர். தொல்லை தந்த வாகனத்தை சீர் செய்வீர். பிள்ளைகளின் பிடிவாதம் குறைந்து, உங்கள் சொல் கேட்டு நடப்பார்கள். வியாபாரத்தில் போட்டி குறையும். உத்தியோகத்தில் புதிய பதவிக்கு தேர்வு செய்யப்படுவீர்.
» இறுதி ‘சிம்பியாட்’ யுத்தம் - ‘Venom: The Last Dance’ ட்ரெய்லர் எப்படி?
» “யாருக்கும் அஞ்சாதீர்கள்” - அரசு அதிகாரிகளுக்கு கார்கே கடிதம்
கடகம்: புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பர். அரசு வேலைகள் முடிவுக்கு வரும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும்.
சிம்மம்: புதிய வீடு கட்ட முயற்சி செய்வீர். வங்கியில் கேட்ட கடனுதவி கிடைக்கும். ஈகோ பிரச்சினை தீர்ந்து கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவீர். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்.
கன்னி: குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பிருக்காது. பிள்ளைகளால் டென்ஷன் ஏற்படும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அண்டை, அயலாரின் செயல்பாடு கோபம் தரும். அலுவலகத்தில் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்கவும்.
துலாம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாங்கிய கடனை பைசல் செய்வீர்கள். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்கலாம். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.
விருச்சிகம்: பழைய பள்ளி நண்பர்களின் வீட்டு விசேஷங்களில் பங்கேற்று நட்பை புதுப்பிப்பீர். விருந்தினர் வருகை
யால் இல்லத்தில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தி யோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்.
தனுசு: எதார்த்தமான பேச்சால் சுற்றியிருப்பவர்களை வசீகரிப்பீர்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் தேடி வருவர். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள்.
மகரம்: வெளிவட்டாத்தில் மதிப்பு, மரியாதை உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகும். பழைய பள்ளி நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உண்டு.
கும்பம்: பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். முக மலர்ச்சியுடன் காணப்படுவீர். பிள்ளைகளால் இருந்து வந்த மன உளைச்சல் நீங்கும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவர். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். புதிய பதவி கிடைக்கும்.
மீனம்: குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் விலகும். பணவரவு திருப்தி தரும். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பேசி பழகுவது நல்லது. வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர். உத்தியோகத்தில் செல்வாக்கு உயரும். விவாதங்களைத் தவிர்க்கவும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago