பொதுப்பலன்: வியாபார கணக்கு முடிக்க, பணியாட்களை விடுவிக்க, அழகு, உடற்பயிற்சி சாதனங்கள் வாங்க, ரகசியங்கள் வெளியிட, பழைய நட்பை புதுப்பிக்க, சொத்து விவகாரங்கள் பேச நல்ல நாள். செவ்வாய் பகவானுக்கு பால் அபிஷேகம், செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்தால் தடைகள் விலகும். ராகு காலத்தில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதால் எண்ணங்கள் நிறைவேறும். கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ் படிப்பதால் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
மேஷம்:குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். நீண்ட நாட்களாக தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்திப்பீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் நிம்மதி கிட்டும். உங்கள் மீது இருந்த வீண் பழி அகலும். சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும்.
ரிஷபம்: பிரபலங்களின் நட்பு கிடைக்கும். முக்கிய பிரமுகர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர். தாயாரின் உடல்நலம் திருப்தி தரும். முன்கோபம் குறையும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். புதிய பங்குதாரர்கள் கிடைப்பார்கள். உத்தியோகத்தில் நல்ல செய்தி கிட்டும்.
மிதுனம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நன்மை தரும். விலையுயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகவும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும். நீங்கள் தேடிய முக்கிய ஆவணம் கிடைக்கும். வீண் விவாதம் வேண்டாம்.
கடகம்: பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் உண்டு. எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேறும். பணவரவு திருப்தி தரும். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் விலகும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கும் லாபம் கிட்டும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.
சிம்மம்: எதிர்பார்த்து காத்திருந்த பணம் கைக்கு வந்து சேரும். மூத்த சகோதர வகையில் ஆதரவு உண்டு. அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பழகவும். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். பங்குதாரர் உதவிகரமாக இருப்பார். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். கௌரவ பதவி கிடைக்க வாய்ப்புண்டு.
கன்னி: வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பேச்சில் இனிமை பிறக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உண்டு.
துலாம்: குழப்பங்கள் நீங்கி மனதில் தெளிவு பிறக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். சகோதர - சகோதரிகள் பாசமாக இருப்பார்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் புது பொறுப்புகள் ஏற்பீர்.
விருச்சிகம்: கடந்த கால சுகமான அனுபவங்கள் எல்லாம் மனதில் நிழலாடும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவர். பணவரவு திருப்தி தரும். விருந்தினர் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் நன்றியுடன் இருப்பர். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.
தனுசு: பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவெடுப்பீர். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளை மிக எளிதாக செய்து அனைவரது பாராட்டை பெறுவீர்.
மகரம்: உடல் சோர்வு, அலைச்சல் ஏற்படும். பூர்வீக சொத்து விஷயத்தில் குடும்பத்தாரிடம் விட்டு கொடுத்து போவது நல்லது. வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சக ஊழியர்களிடம் வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். பொறுப்பு கூடும்.
கும்பம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பணப் புழக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டி குறையும். வேலையாட்கள் அன்பாக நடந்து கொள்வர். உத்தியோகத்தில் புதிய பதவி கிடைக்கும். மேலதிகாரிகள் பாராட்டுவர். பணிச்சுமை கூடினாலும், நிறைய அனுபவத்தை தரும்.
மீனம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகள் நம்பிக்கை தருவர். ஆடம்பரச் செலவைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு அதிகம். பொறுப்புணர்ந்து செயல்படவும். யாருடனும் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago