இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

பொதுப்பலன்: கதிர் அறுக்க, தானியங்கள் சேகரிக்க, பழைய வீட்டைப் புதுப்பிக்க, வாகனம் விற்க, குலதெய்வத்தை வணங்க, சொத்து விவகாரங்கள், வழக்குகள் பேச நல்ல நாள். யோக ஹயக்ரீவ பெருமாளை வழிபடுவதால் கல்வி, கேள்விகளில் வெற்றி பெற்று சாதனை படைக்கலாம். புதன் பகவானுக்கு அபிஷேகம், பாசிப் பருப்பு பாயாசம் நிவேதனம் செய்தால் மனக் குழப்பம், பதற்றம் நீங்கும். பச்சைப் பயிறு தானம் செய்வதும் நன்மை அளிக்கும்.

மேஷம்: வெளிவட்டாரத்தில் நிதானமாக பழக வேண்டும். வீடு, வாகனம் வாங்குவதில் தம்பதிக்குள் மனக்கசப்புகள் வரக் கூடும். தியானம் செய்வது நல்லது. வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.

ரிஷபம்: தடைபட்டிருந்த காரியங்கள் எல்லாம் நல்ல விதத்தில் முடிவடையும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் நல்ல தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். பொறுப்பு கூடும்.

மிதுனம்: விலையுயர்ந்த கலைப் பொருட்களை வாங்குவீர்கள். மனைவிக்கு புது ஆடை, ஆபரணங்களை வாங்கி கொடுப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியாக செயல்பட்டு லாபமீட்டுவீர்கள். வாகனப்பழுது விலகும். அலுவலகத்தில் உங்கள் மீது இருந்த வீண் பழி நீங்கி, மதிப்பு உயரும். தேவையற்ற பேச்சுகளை தவிர்க்கவும்.

கடகம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமை அடைவீர்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். அண்டை அயலாருடன் இருந்து வந்த கருத்துமோதல் விலகும். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு. சக ஊழியர்களுடன் இணக்கமாகச் செல்லவும்.

சிம்மம்: புது சிந்தனையால் மனக்குழப்பங்கள் விலகும். சேமிக்கும் அளவுக்கு பணவரவு இருக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. பூர்வீக சொத்து பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். புதிய பங்குதாரர்களுடன் இணைந்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். உத்தியோகத்தில் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். பொறுப்பு கூடும்.

கன்னி: திடீர் யோகம் உண்டாகும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். உறவினர்கள் உங்களைப் பற்றி பெருமையாக பேசுவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய பங்குதாரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். அலுவலகத்தில் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நன்மை அளிக்கும்.

துலாம்: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல், டென்ஷன் வரக் கூடும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி உண்டு. வியாபாரத்தில் புது முடிவு எடுக்க வேண்டாம். உத்தி
யோகத்தில் புதிய அனுபவத்தை சந்திக்க தயாராக இருக்கவும். ஊழியர்களுடன் விவாதம் தவிர்க்கவும்.

விருச்சிகம்: பாதியில் நின்ற வேலைகள் விரைவாக முடிவடையும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். நண்பர்கள், உறவினர்கள் ஒத்துழைப்பு அளிப்பார்கள். புதிய பங்குதாரர்களுடன் சேர்ந்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் உயரதிகாரி முக்கிய விஷயங்களை பகிரும் அளவுக்கு நெருக்கமாவீர்.

தனுசு: வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சிலர் உங்கள் உதவியை நாடுவர். முத்த சகோதரர் உங்களை புரிந்து கொள்வார். கடையில் சில மாற்றங்களை செய்து வாடிக்கையாளர்களை கவருவீர். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் சேரும். சக ஊழியர்கள், மேலதிகாரி, பணியாட்களிடம் தேவையற்ற விவாதம் வேண்டாம்.

மகரம்: பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தாயாரின் மருத்துவச் செலவு குறையும். உடன்பிறந்தோர் உதவிகரமாக நடந்து கொள்வார்கள். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபாரம் சூடு பிடிக்கும். பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் புதிய திட்டத்துக்கு தலைமை ஏற்பீர்கள்.

கும்பம்: குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகர
மாக அமையும். மாணவர்களின் கவனம் படிப்பில் திரும்பும். தந்தைவழியில் நிம்மதியுண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர்கள். பொறுப்பு கூடும்.

மீனம்: பழைய பொன்,பொருளை மாற்றிவிட்டு புதியன வாங்குவீர்கள். தாயார், பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். மனைவியின் சகோதரர்களால் ஆதாயமுண்டு. வியாபாரத்தில் வராது என்றிருந்த பணம் வந்து சேரும். சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

16 hours ago

ஜோதிடம்

16 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்