இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

பொதுப்பலன்: கடன் தீர்க்க, வழக்குகள் பேசி முடிக்க, மருந்துண்ண, மூலிகை சேகரிக்க, பணியாட்களை விடுவிக்க, அரசு அதிகாரிகளை சந்திக்க, பரத நாட்டியம், மிருதங்கம் பயில நல்ல நாள். செவ்வாய் பகவானுக்கு பால் அபிஷேகம், செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்தால் தடைகள் விலகும். ராகு காலத்தில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதால் நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ் படிப்பதால் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

மேஷம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். பழைய வாகனம் செலவு வைக்கும். வேற்றுமதத்தவர், வேற்றுமொழி பேசுபவர்கள் உதவுவர். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர். பங்குதாரர்கள் ஆதரவு தருவர். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். அரசாங்க அதிகாரிகளின் சந்திப்பு நிகழும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். நீண்ட நாட்களாக தேடிக் கொண்டிருந்த ஆவணம் கைக்கு கிடைக்கும்.

மிதுனம்: திட்டமிட்ட காரியங்கள் நடந்தேறும். எதிலும் அவசரம் வேண்டாம். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படவும். முக்கிய கோப்புகளை கவனமாக கையாள வேண்டும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு. பொறுப்பு கூடும்.

கடகம்: பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து காத்திருந்த தொகை கைக்கு வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்களுடன் இணைந்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

சிம்மம்: முகமலர்ச்சியுடன் காணப்படுவீர். நீண்ட நாள் எண்ணங்களை பூர்த்தி செய்து கொள்வீர்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து கணவன் - மனைவிக்குள் நெருக்கம் அதிகமாகும். தந்தையின் உடல்நிலை சீராக இருக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். புதிய கிளை திறப்பீர்.

கன்னி: புது கருத்துகளால் சுற்றியிருப்பவர்களை வசீகரிப்பீர். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர். பணவரவு உண்டு. மனஸ்தாபங்கள் நீங்கி கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். முன்கோபம் குறையும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்கலாம். வீண் விவாதங்களை தவிர்க்கவும்.

துலாம்: எதிர்பாராத செலவுகள் வரக் கூடும். புதிய வீடு வாங்க திட்டமிடுவீர். குடும்ப உறுப்பினர்களின் பேச்சுக்கு மதிப்பளிக்கவும். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பழகவும். வியாபாரத்தில் பணியாட்களால் தொந்தரவு ஏற்படும். வாகனத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.

விருச்சிகம்: குடும்பத்தினருடன் முக்கிய பிரமுகர்களின் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர். நீங்கள் முன்னர் செய்த உதவிக்கு இப்போது பாராட்டு கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவுடன் பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு காண்பீர். வியாபாரத்தில் லாபம் பார்க்கலாம். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

தனுசு: அரசாங்க அதிகாரிகளின் நட்புறவு கிட்டும். நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து முடிவு எடுப்பர். வீடு,
வாகனத்தை சீர் செய்வீர். பங்குதாரர்களின் உதவியுடன் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். புதிய கிளை திறப்பீர். உத்தியோகத்தில் புது பதவி தேடி வரும். சக ஊழியர் மத்தியில் மதிப்பு உயரும்.

மகரம்: சொந்த ஊரிலிருந்து நல்ல செய்திகள் தேடி வரும். புது அனுபவம் கிடைக்கும். புதிதாக வாகனம் வாங்கும் அமைப்பு ஏற்படும். மனைவி, தாயாரின் உடல்நிலை சீராகும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் தடைபட்ட வேலைகள் முடியும். மேலதிகாரியின் பாராட்டு கிடைக்கும்.

கும்பம்: குழப்பம் தீர்ந்து குடும்பத்தில் மனநிறைவு கிட்டும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். பழைய பிரச்சினைகளை எளிதாகத் தீர்ப்பீர். மாணவர்களுக்கு நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டு. புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர்.

மீனம்: மற்றவர்களுடன் இங்கிதமாக பேசுங்கள். வீண் அலைச்சல் அதிகரிக்கும். தம்பதிக்குள் விட்டு கொடுத்து போவது நல்லது. பழைய வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு ஏற்படும். புதிய பங்குதாரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

22 hours ago

ஜோதிடம்

22 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்