இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

பொதுப்பலன்: கடன் தீர்க்க, வியாபாரக் கணக்கு முடிக்க, சொத்து, வாகனம் விற்க, ரகசியக் கூட்டங்கள் நடத்த, காவல், வனதெய்வங்களை வணங்க, மூலிகை குளியல் செய்ய நல்ல நாள். சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், நீல மலர்களால் அர்ச்சனை செய்து எள் அன்னம் நிவேதனம் செய்தால், மன அமைதி பெறலாம். ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுவதால் தடைகள் விலகும். விஷ்ணு சஹஸ்ரநாமம், விநாயகர் அகவல் படித்தால் எதையும் சமாளிக்கும் திறன் கிடைக்கும்.

மேஷம்: சாணக்கியத்தனமாகப் பேசி காரியம் சாதிப்பீர். உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் பணத்தை திருப்பித் தருவார்கள். சகோதரர்களின் ஆதரவுடன் பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் புதிய பதவி கிடைத்து பொறுப்பு கூடும்.

ரிஷபம்: உங்களின் வெளிப்படையான பேச்சை அனைவரும் ரசிப்பார்கள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் மேன்மை உண்டு. புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெற்று முன்னேறுவீர்.

மிதுனம்: முன்கோபம், வீண் அலைச்சல் வரக் கூடும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகவும். பங்குதாரர்களின் உதவியுடன் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும்.

கடகம்: மனதில் இருந்த வீண் குழப்பம், பயம் விலகும். திடீர் பணவரவு, செல்வாக்கு உண்டு. பழுதான வாகனம் சீராகும். சிலர் புது வாகனம் வாங்குவீர். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை குறையும். வியா
பாரம் சூடு பிடித்து, நல்ல லாபம் தரும். அலுவலகத்தில் வேலைச் சுமை குறையும். கவுரவ பதவி கிடைக்கும்.

சிம்மம்: இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். நவீன மின்னணு சாதனங்களை வாங்கி மகிழ்வீர். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் மேன்மை உண்டு. அலுவலகத்தில் வீண் விவாதம் தவிர்க்கவும்.

கன்னி: எதிர்பாராத பணவரவால் மன மகிழ்ச்சியுண்டு. நண்பர்கள் ஆதரவாக பேச தொடங்குவர். உறவினர்
கள் மத்தியில் மதிப்பு கூடும். புதிய பங்குதாரர்களுடன் சேர்ந்து வியாபாரத்தை விரிவுபடுத்த முற்படுவீர்கள். உத்தியோகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். மேலதிகாரி நேசக்கரம் நீட்டுவார்.

துலாம்: பழைய நல்ல நினைவுகளில் மூழ்குவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். யோகா, தியானம், ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பர். புதிய கிளை திறக்க ஏற்பாடு செய்வீர். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் வீண் விவாதம் தவிர்க்கவும்.

விருச்சிகம்: உறவினர்கள், நண்பர்களிடம் பேசும்போது கவனம் தேவை. பழைய வாகனம் செலவு வைக்கும். சகோதரர்
களின் ஆதரவால் பூர்வீக சொத்து பிரச்சினை தீரும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

தனுசு: விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகவும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடித்து, பாராட்டு பெறுவீர்கள்.

மகரம்: மறதியால் பிரச்சினை வந்து நீங்கும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். சாலைகளில் கவனமாக கடந்து செல்லவும். விருந்தினர் வருகையால் இல்லத்தில் இருந்த சூழல் மாறி மகிழ்ச்சி தொடங்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிட்டும். அலுவலகத்தில் உங்கள் மீது இருந்த வீண் பழி நீங்கும். மதிப்பு உயரும்.

கும்பம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். பெற்றோரின் உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்தியோகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர்கள். பொறுப்புகள் கூடும்.

மீனம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கி நிம்மதி கிட்டும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு உண்டு. யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE