பொதுப்பலன்: குழந்தைக்கு காது குத்தி பெயர் சூட்ட, வியாபாரம் தொடங்க, வீடு, மனை பத்திரப் பதிவு செய்ய, கலைகள் பயில, நகைகள் வாங்க நன்று. எதிரிகள் மீது வழக்கு தொடர்ந்தவர்கள் வழக்கறிஞரின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும்.
சிவஸ்துதி படித்து, சிவன் கோயிலில் அபிஷேக, அர்ச்சனை செய்து, எள் தீபம் ஏற்றினால் நன்மை உண்டாகும். பச்சரிசி அல்லது நெல் தானம் செய்தால், இழுபறியாக இருந்த காரியங்கள் நிறைவேறும்.
மேஷம்: தேவையற்ற பரபரப்பு, பதற்றம் ஓய்ந்து, மனநிம்மதி, அமைதியுடன் காணப்படுவீர்கள். உடல்நலம் சீராக இருக்கும். பிள்ளைகளால் வெளியூர் பயணம், அலைச்சல், அசதி இருந்தாலும், ஆதாயமும் உண்டு. எக்காரியத்திலும் நிதானமாக யோசித்து முடிவெடுப்பது நல்லது.
ரிஷபம்: வெளி வட்டாரத்தில் புதிய நண்பர்களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் மனஸ்தாபங்கள் நீங்கி, அன்யோன்யம் பிறக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வாகன பழுது நீங்கும். ஆன்மிகம், யோகாவில் நாட்டம் அதிகரிக்கும்.
மிதுனம்: கடந்தகால சுகமான அனுபவங்களை நினைத்து மனதில் சந்தோஷம் பொங்கும். பழுதான வீடு, வாகனத்தை சரிசெய்வீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கி தருவீர்கள். அலுவலக பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிகாரிகள், சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
கடகம்: எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்துவைக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் நீங்கும். வீண், ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். தாய்வழி சொந்தங்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகளை தகர்ப்பீர்கள்.
சிம்மம்: எதிலும் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செயல்படக் கூடாது. நிதானமாக யோசித்து முடிவெடுப்பது அவசியம். குடும்பத்தில் மூத்தவர்களின் அறிவுரை, ஆலோசனையை கேட்டு நடப்பது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகள் தேங்கும். கேட்ட இடத்தில் உதவிகள் சற்று தாமதமாகும்.
கன்னி: வீண் கவலை, அச்சம் நீங்கி, நம்பிக்கை, மகிழ்ச்சி, உற்சாகம் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்துங்கள். அலுவலகத்தில் வேலைச்சுமை, டென்ஷன் அதிகரிக்கும். ஆன்மிகம், யோகா, தியானத்தில் ஈடுபாடு உண்டாகும். பல வகையிலும் பண வரவு, பொருள் வரவு உண்டு.
துலாம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரி நேசக்கரம் நீட்டுவார். அரசு, வங்கி வகையில் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். எதிலும் நிதானம் அவசியம்.
விருச்சிகம்: வெளி வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். புதிய பதவி, பொறுப்புகள் தேடி வரும். பெற்றோரின் உடல்நலம் திருப்திகரமாக இருக்கும். மருத்துவ செலவுகள் படிப்படியாக குறையும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் இடையிலான பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
தனுசு: எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வருவதால், மனநிம்மதி கிடைக்கும். மனைவி வழியில் மரியாதை, அந்தஸ்து உயரும். பெற்றோரின் ஆசையை அறிந்து நிறைவேற்றுவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நாடி வந்தவர்களுக்கு உங்களால் இயன்ற உதவியை செய்வீர்கள்.
மகரம்: சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள் கவுரவ பதவிகள் தேடி வரும். ஏற்கெனவே செய்த பணிகளுக்கு இப்போது பாராட்டு கிடைக்கும். சகோதர, சகோதரிகளுடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். பங்குச் சந்தை, கமிஷன் வகைகளால் ஆதாயம் உண்டு. எதிலும் பொறுமை தேவை.
கும்பம்: உங்கள் சாதுர்யமான பேச்சால், நீண்டகால பிரச்சினைகளை சுமுகமாக தீர்ப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி, அன்யோன்யம் பிறக்கும். கையில் காசு, பணம் புரளும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
மீனம்: பல வகையிலும் அலைச்சல், அசதி இருந்தாலும், ஆதாயமும் உண்டு. எடுத்த வேலை முடியவில்லையே என கோபப்படுவீர்கள். நீங்கள் ஒன்று பேச, மற்றவர்கள் வேறு விதமாக புரிந்துகொள்வார்கள் என்பதால், பேச்சில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago