பொதுப்பலன்: திருமணம், கிரகப் பிரவேசம் செய்ய, பதவி ஏற்க, குழந்தைக்கு காது குத்த, சொத்து பத்திரப் பதிவு செய்ய, வியாபாரம் தொடங்க நல்ல நாள். குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டைகடலை மாலை அணிவித்தால் நன்மை உண்டு. நவகிரக குரு பகவானுக்கு அபிஷேக, அர்ச்சனை செய்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் தடைகள் விலகும். சித்தர் சமாதியில் தியானம் செய்வதாலும், விஷ்ணு சஹஸ்ரநாமம் படிப்பதாலும் மன அமைதி பெறலாம்.
மேஷம்: பணப் பற்றாகுறை விலகும். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். தாயின் உடல் நலம் சீராகும். பிள்ளைகளுக்கு தக்க ஆலோசனை வழங்கி நல்வழிப்படுத்துவீர். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவர். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் இணைவர். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.
ரிஷபம்: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். நண்பர், உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். வியாபாரத்தில் நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் வேலை பளு குறையும். சக ஊழியர்களுடன் இணக்கமாக செல்லவும்.
மிதுனம்: இல்லத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர். குடும்பத்துடன் சென்று நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர். அக்கம் - பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். பங்குதாரர்களுடன் இணைந்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டு.
» அயோத்தி பாலராமர் சிலை மீது சூரிய ஒளி விழுவது எப்படி? - தொழில்நுட்பம் குறித்து விஞ்ஞானிகள் விளக்கம்
» 2024-ல் உத்தரவாதத்தை கொண்டு வருகிறேன்: பிரதமர் மோடி பேச்சு @ அசாம்
கடகம்: வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்கள் வருகைதருவார்கள். பண வரவால் சேமிப்பு அதிகரிக்கும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். பழைய சிக்கல்கள் விலகும். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்கள். அலுவலகத்தில் உங்கள் மதிப்பு உயரும்.
சிம்மம்: பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். தாயார், மனைவி உடல் நலத்தில் கவனம் தேவை. பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வாகனப்பழுது நீங்கும். அண்டை, அயலாரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் நிதானம் தேவை. உத்தியோகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும்.
கன்னி: புதிய கோணத்தில் சிந்தித்து செயல்படுவீர்கள். குடும்பத்தினரால் மனநிம்மதி கிட்டும். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்கள் தேடி வருவர். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் குழப்பம் நீங்கும்.
துலாம்: தாய்வழி, மனைவிவழி உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடு, விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். புதிய பங்குதாரர்களுடன் இணைந்து வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
விருச்சிகம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். மனதில் தெளிவு பிறக்கும். தாயாரின் உடல்நலம் சீராகும். சேமிப்பை அதிகரிப்பீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பழைய வழக்குகளில் முன்னேற்றம் இருக்கும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.
தனுசு: வெளியூரிலிருந்து உறவினர், நண்பர்களின் வருகையுண்டு. குழப்பங்கள் தீர்ந்து, குடும்பத்தில் மனநிம்மதி பிறக்கும். வயிற்றுவலி, கழுத்துவலி விலகும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர். புதிய பங்குதாரர் கிடைப்பார். உத்தியோகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர்கள்.
மகரம்: இழுபறியாக இருந்த சில காரியங்களை போராடி முடிப்பீர். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக, அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் பொறுப்புகள் கூடும்.
கும்பம்: மனக் குழப்பங்கள் விலகும். வெளியூரிலிருந்து உறவினர், நண்பர்களின் வருகை உண்டு. புதிய தொழில் தொடங்க முயற்சி செய்வீர்கள். குடும்பத்தினரின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர். உத்தியோகத்தில் வீண் பழி தீர்ந்து நிம்மதி பிறக்கும். புதிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்.
மீனம்: உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக செயல்படுவீர். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவர். தாயாரின் உடல்நலம் சீராகும். தந்தைவழியில் அனுகூலம் உண்டாகும். யாரையும் எடுத்தெறிந்து பேசுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களை கவருவீர்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago