இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

பொதுப்பலன்: இன்று ஸ்ரீராம நவமி. சொத்து விவகாரங்கள், வழக்குகள் பேச, வங்கிக் கடன் பெற, செங்கல் சூளை பிரிக்க, நவக்கிரக சாந்தி செய்ய, பயணம் தொடங்க நல்ல நாள். யோக ஹயக்ரீவ பெருமாளை வழிபடுவதால் கல்வி, கேள்விகளில் வெற்றி பெற்று சாதனை படைக்கலாம். புதன் பகவானுக்கு அபிஷேக, ஆராதனைகள், பாசிப் பருப்பு பாயாசம் நிவேதனம் செய்தால் மனக் குழப்பம், பதற்றம் நீங்கும். பச்சைப் பயிறு தானம் செய்வதும் நன்மை அளிக்கும்.

மேஷம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். கணவன் - மனைவிக் குள் நிலவிய கருத்துவேறுபாடுகள் நீங்கி அன்யோன் யம் பிறக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பயணங்கள் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தினரின் விருப்பங்களை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள்.

ரிஷபம்: திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். எதிர்பார்த்த உதவிகள் தடங்கலின்றி கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். உடல் அசதி விலகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

மிதுனம்: முகப்பொலிவு கூடும். அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு சில வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். சோர்வு நீங்கும். குடும்பத்துடன் புண்ணிய தலங்களுக்குச் செல்ல திட்டமிடுவீர்கள்.

கடகம்: சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டு அவஸ்தைப்படாதீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்காது. உறவினர், நண்பர்களை அநாவசியமாகப் பகைத்துக் கொள்ளாதீர்கள். வாகனத்தை எடுக்கும் முன்எரிபொருள் இருப்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

சிம்மம்: எதிர்காலத்தைப் பற்றிய பயம் விலகும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுக மாவார்கள். அலுவலகத்தில் வேலைச்சுமை குறையும். எதிர்காலத் திட்டங்கள் குறித்து பால்ய நண்பர்களிடம் ஆலோசனை கேட்பீர்கள்.

கன்னி: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவர்ந்து விடுவீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடுகள் நீங்கும். சகோதர - சகோதரி களின் ஆதரவு உண்டு. அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை மாற்றி புதியது வாங்குவீர்கள். வீடு, வாகன பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

துலாம்: நவீன மின்சாதனங்கள், கலைப்பொருட்கள் வீடு வந்து சேரும். நீண்டகாலமாக விலகியிருந்த சொந்தபந்தங்கள் விரும்பி வருவார்கள். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பிறக்கும். மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவெடுப்பீர்கள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

விருச்சிகம்: நெடுநாட்களாகத் திட்டமிட்டுக் கொண்டிருந்த சில காரியங்களை செயல்படுத்திக் காட்டுவீர்கள். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளால் இருந்துவந்த தொல்லை நீங்கும். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சியையும், லாபத்தையும் தரும்.

தனுசு: சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கை அவசியம். வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து ஏமாந்து விடாதீர்கள். பிள்ளைகளிடம் கோபத்தைக் காட்ட வேண்டாம். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். அக்கம் பக்கத்தினரால் சில தொல்லைகள் ஏற்படக்கூடும்.

மகரம்: வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். உறவினர்கள், நண்பர்களின் சந்திப்பு நிகழும். எதிர்பார்த்த தொகை நீண்ட இழுபறிக்குப் பின்னர் கைக்கு வரும். வெளியூர் பயணம் உண்டு. வீட்டின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள்.

கும்பம்: மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். மூத்த சகோதரர் உங்கள் உதவியை நாடுவார். குடும்பத்தினரின் எண்ணங்களை உடனுக்குடன் பூர்த்தி செய்வீர்கள். பணவரவு அதிகரிக்கும். வேலை தேடுவோருக்கு நல்ல தகவல் வரும். வீடு, மனை வாங்குவது குறித்து ஆலோசிப்பீர்கள்.

மீனம்: துடிப்புடன் காணப்படுவீர்கள். கணவன் - மனைவிக் குள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல் வீர்கள். விருந்தினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் குதூகலமான சூழல் காணப்படும். வெளிவட்டாரத்தில் உங்கள் கை ஓங்கும். ஆன்மிகப் பெரியோர்களைச் சந்திப்பீர்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்