இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

பொதுப்பலன்: வாகனம் விற்க, கடன் தீர்க்க, பங்குதாரர்களுடன் வியாபாரக் கணக்கு முடிக்க, ஜோதிடம், ஆயுர்வேத மருத்துவம் பயில, வெற்றிலை பயிரிட, குழந்தைக்கு பெயர் சூட்ட, அன்னம் ஊட்ட நல்ல நாள். குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டைகடலை மாலை அணிவித்தால் நன்மை உண்டு. நவகிரக குரு பகவானுக்கு அபிஷேக, அர்ச்சனை செய்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் தடைகள் விலகும். சித்தர் சமாதியில் தியானம் செய்வதாலும், விஷ்ணு சஹஸ்ரநாமம் படிப்பதாலும் மன அமைதி பெறலாம்.

மேஷம்: வெளிவட்டாரத்தில் புதிய நண்பர்கள் அறிமுகமாவர். ஈகோ பிரச்சினை தீர்ந்து, கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வாகனப் பழுது நீங்கும்.

ரிஷபம்: குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். கணவன் - மனைவிக்குள் இருந்த பனிப்போர் விலகும். பிள்ளைகளின் வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர். வர வேண்டிய பணம் கைக்கு வரும்.

மிதுனம்: பழைய பொன்,பொருளை மாற்றிவிட்டு புதிதாக வாங்குவீர். மனைவியின் சகோதரர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வராது என்றிருந்த பணம் வரும். சரக்குகள் விற்றுத் தீரும். வழக்கு சாதகமாகும்.

கடகம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாள வேண்டும். புதிய வீடு வாங்க திட்டமிடுவீர்.

சிம்மம்: பிரபலங்கள் சிலரை சந்திப்பதால் உங்கள் வாழ்வில் சில மாற்றங்கள் வரும். வியாபாரத்தில் வேலையாட்கள் அனுசரணையாக நடந்து கொள்வர். யோகா, ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

கன்னி: நான்கைந்து நாட்களாக முடியாமலிருந்த வேலைகள் இன்று முடியும். தந்தையுடன் இருந்து வந்த பனிப்போர் விலகும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். வாகனப் பழுது நீங்கும்.

துலாம்: வீட்டிலுள்ளவர்களின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். மாணவர்களின் கவனம் படிப்பில் திரும்பும். தந்தைவழியில் நிம்மதியுண்டு.

விருச்சிகம்: உற்றார், உறவினர்கள் உங்கள் வீடு தேடி வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். குடும்பத்துடன் சென்று குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். பணவரவு உண்டு.

தனுசு: பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் வேண்டாம். திடீர் பயணம் ஏற்படும்.

மகரம்: வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வீடு வந்து சேரும். உத்தியோகத்தில் டென்ஷன் வரக் கூடும்.

கும்பம்: இங்கிதமாகப் பேசி சுற்றியிருப்பவர்களை கவருவீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் ஆதாயம் உண்டு. தாயாரின் உடல்நலம் சீராகும். நண்பர்களுடன் சேர்ந்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்.

மீனம்: வீட்டிலுள்ள பழைய பொருட்களை மாற்றுவீர். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரி பாராட்டும் விதமாக நடப்பீர். சக ஊழியர்களுடன் இணக்கமான போக்கை கடைபிடிக்கவும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

மேலும்