இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

பொதுப்பலன்: திருமணம், சீமந்தம் செய்ய, குழந்தைக்கு சிகை நீக்கி, காது குத்த, பெயர் சூட்ட, தங்க நகைகள் மற்றும் வாகனம் வாங்க, வியாபாரம் தொடங்க, தானியம் சேமிக்க நன்று. காரிய வெற்றியை கச்சிதமாக பெற்றுக் கொடுக்கும் இந்த புதன்கிழமை விநாயகர் வழிபாடு செய்ய மிகவும் பிரசித்தி பெற்ற நாள். ஒவ்வொரு புதன்கிழமையும் விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபட்டு வந்தால் நினைத்தது நினைத்தபடி நடக்கும்.

மேஷம்: வியாபாரரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களுடன் உறவாடிக் கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களைக் கண்டறிந்து ஒதுக்குவீர்கள்.

ரிஷபம்: இழுபறியாகிக் கொண்டிருந்த சுபகாரியங்கள் இப்போது கூடி வரும். பிள்ளைகளின் எண்ணங்களை உடனுக்குடன் பூர்த்தி செய்வீர்கள். சகோதர, சகோதரிகளால் நன்மையுண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்.

மிதுனம்: நெடுநாளாகத் திட்டமிட்டுக் கொண்டிருந்த சில காரியங்களை செயல்படுத்திக் காட்டுவீர்கள். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரியின் ஆதரவு கிட்டும்.

கடகம்: வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். கணவன் - மனைவிக்குள் சிறுசிறு உரசல்கள் வந்து போகும். சொந்த ஊரில் எதிர்ப்புகள் வரும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் உண்டு.

சிம்மம்: கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.

கன்னி: புதிதாக டி.வி., ஃப்ரிட்ஜ், செல்போன் போன்ற மின்சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் மனநிம்மதி கிட்டும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார்.

துலாம்: நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். முகப்பொலிவு, ஆரோக்கியம் கூடும்.

விருச்சிகம்: உங்களின் குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்கள். பணவரவு திருப்தி தரும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். தந்தையின் உடல்நிலை சீராகும். அக்கம்பக்கத்தினரின் ஆதரவு கிட்டும்.

தனுசு: எதற்கெடுத்தாலும் அடுத்தவர்களை குறைகூறுவதை நிறுத்துங்கள். மற்றவர்களுக்கு நியாயம் பேசப்போய் பெயரை கெடுத்துக் கொள்ள வேண்டாம். பண விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது.

மகரம்: மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. வீண் செலவுகள் குறையும். குடும்பத்தினரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள்.

கும்பம்: சோர்வு நீங்கும். பணவரவு தாராளமாக இருக்கும். தந்தைவழியில் ஆதாயம் உண்டு. உங்களைத் தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள், ஆன்மிகவாதிகளின் சந்திப்பு நிகழும்.

மீனம்: பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். சகோதரர் வகையில் ஒற்றுமை பிறக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள், மின்சாதனங்கள் வாங்குவீர்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE