இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

பொதுப்பலன்: பழைய கடன் தீர்க்க, விவகாரங்கள் பேசி முடிக்க, கதிரறுக்க, கிணறு ஆழப்படுத்த, வாகனம், வீட்டு மனை விற்க நன்று. சிவஸ்துதி படித்து, சிவபெருமானுக்கு பால், தயிர், பன்னீர் அபிஷேகம், தாமரை, அரளி மலர்கள், வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து, எள் தீபம் ஏற்றினால் காரியத் தடைகள் நீங்கி நன்மை உண்டாகும். பச்சரிசி அல்லது நெல் தானம் செய்தால், நீண்ட நாள் கனவுகள் அனைத்தும் நிறைவேறும்.

மேஷம்: கைமாற்றாக வாங்கிய பணத்தை தந்து முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் ஈகோ பிரச்சினைகள் தீரும். தாய் உடல்நலம் சீராகும். வியாபாரத்தை விரிவுபடுத்த பண உதவி கிடைக்கும்.

ரிஷபம்: நீண்ட நாட்களுக்கு பிறகு, பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். விஐபிக்களால் பாராட்டப்படுவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டு.

மிதுனம்: தவிர்க்க முடியாத செலவு வந்துபோகும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. உறவினர்கள், நண்பர்களால் அன்புத் தொல்லை அதிகமாகும்.

கடகம்: குடும்பத்தில் நிலவிய காரசாரமான விவாதங்கள் மறையும். பிள்ளைகளால் மரியாதை, அந்தஸ்து கூடும். நல்லவர்கள் நட்பு கிடைக்கும். உத்யோகத்தில் உயர் அதிகாரி நேசக்கரம் நீட்டுவார்.

சிம்மம்: வெகு நாட்களாக மனதில் இருந்த பிரச்சினைக்கு முடிவுகட்டுவீர்கள். புது ஆபரணம், ஆடைகள் சேரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

கன்னி: உங்கள் ஆளுமை திறனால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு கூடும். பூர்வீக சொத்து சம்பந்தமாக சிலரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும்.

துலாம்: பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். மனைவி வழி உறவினர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். நண்பர் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள்.

விருச்சிகம்: பல முறை போராடிய பிறகே முக்கிய காரியங்கள் நிறைவேறும். குடும்பத்தினருடன் அனுசரித்து செல்வது அவசியம். வீண் செலவுகள் வரக்கூடும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு.

தனுசு: வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. தந்தை வழி உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடப்பார்கள். உத்யோ கத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உண்டு.

மகரம்: உங்கள் யதார்த்தமான பேச்சால், தடைபட்ட காரியங்கள் முடியும். குடும்பத்தினரின் ஆதரவு பெருகும். பிள்ளைகள் உடல்நலம் சீராகும். பணியாளர்கள் அனுசரனையாக நடந்து கொள்வார்கள்.

கும்பம்: பக்குவமாக பேசி முக்கிய வேலைகளை முடித்துக்காட்டுவீர்கள். மனைவி வழியில் இருந்த மனஸ்தாபங் கள் விலகும். வாகனத்தை சரிசெய்வீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள்.

மீனம்: சொந்த பந்தங்கள் இடையே மதிப்பு, மரியாதை கூடும். தந்தை வழி சொத்துகள் கைக்கு வரும். சகோதர, சகோதரிகள் தக்க சமயத்தில் பண உதவி செய்வார்கள். வாகனப் பழுது நீங்கும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

6 days ago

மேலும்