மேஷம்: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வீடு கட்ட பிளான் அப்ரூவலாகி வரும். பணவரவு ஓரளவு திருப்தி தரும். உத்தியோகத்தில் அவ்வப்போது இருந்து வந்த பிரச்சினைகள் தீரும்.
ரிஷபம்: முக்கிய பிரமுகர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். வீண் அலைச்சல், டென்ஷன் விலகும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். கூட்டுத் தொழிலில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும்.
மிதுனம்: இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். வாகனப் பழுது நீங்கும்.
கடகம்: தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழம்பி கொண்டிருக்காதீர். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை. அக்கம் பக்கத்தினருடன் அளவாக பேசி பழகவும்.
» மாநிலங்களின் கொள்கை உருவாக்கத்துக்கு புதிய தளம்: நிதி ஆயோக் அறிமுகம்
» பாக். பஞ்சாப் மாகாணத்தில் முதல்முறையாக அமைச்சரானார் சீக்கியர்
சிம்மம்: வீட்டில் பழுதடைந்த மின்னணு, மின்சார சாதனத்தை மாற்றுவீர்கள். பிரச்சினைகள் எதுவானாலும் அதை எதிர்கொண்டு சமாளிக்கும் திறன் அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.
கன்னி: எதையும் சாதித்துவிடலாம் என்ற எண்ணம் வரும். பிரபலங்கள் சிலரின் அறிமுகம் கிடைக்கும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களின் ஆதரவு உண்டு. மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள்.
துலாம்: எதிர்ப்புகளை தகர்த்தெறிவீர்கள். பணவரவு திருப்தி தரும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் ஆதாயம்
உண்டு. பிள்ளைகளின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும்.
விருச்சிகம்: திட்டமிட்டபடி செயல்பட்டு வெற்றி காண்பீர். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் தங்கும். வங்கிக் கடனுதவி கிடைக்கும். மாணவர்கள் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வார்கள்.
தனுசு: நெருக்கமானவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க முற்படுவீர். விருந்தினர்கள் வருகையால் திடீர் செலவுகள் இருந்தாலும் சந்தோஷமுண்டு. பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிது வாங்குவீர்.
மகரம்: முக்கிய பிரமுகர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். புதிய யோசனைகள் பிறக்கும். பணவரவால் பழைய கடன் தீரும். கணவன் - மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும்.
கும்பம்: பழைய வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் சிக்கல்கள் வரக் கூடும். பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம்.
மீனம்: தடைபட்ட வேலைகள் முடிவுக்கு வரும். மனைவிவழியில் ஆதாயம் உண்டு. குலதெய்வ கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிக்கு ஆதரவாக இருப்பீர்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
21 hours ago
ஜோதிடம்
21 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago