இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

பொதுப்பலன்: கதிர் அறுக்க, விதை விதைக்க, பரத நாட்டியம் பயில, வீடு, மனை வாங்குவதற்கு முன்பணம் தர, சொத்து விவகாரம் பேசித் தீர்க்க, வீடு கட்ட, பூமி பூஜை செய்ய நல்ல நாள். செவ்வாய் பகவானுக்கு பால் அபிஷேகம், செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்தால் நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். ராகு காலத்தில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதால் வெற்றி கிடைக்கும். கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ் படிப்பதால் தடைகள் விலகும்.

மேஷம்: கைமாற்றாக கேட்டிருந்த பணம் கிடைக்கும். சொத்துப் பிரச்சினைகள் தீரும். முக்கிய பிரமுகர்களின் வீட்டு விசேஷங்களில் பங்கேற்பீர்கள். உங்களால் ஆதாயமடைந்த சிலர் உங்களைச் சந்தித்து மகிழ்வர்.

ரிஷபம்: முன்கோபம் அதிகமாகும். கடந்த காலத்தில் இழந்த நல்ல வாய்ப்புகளை நினைத்து வருந்துவீர்கள். பழைய கசப்பான சம்பவங்கள் எல்லாம் இப்போது நினைவுக்கு வரும். யோகா செய்வது நல்லது.

மிதுனம்: நெடுநாட்களாக தடைபட்டு வந்த காரியங்கள் சுமுகமாக முடியும். குழப்பம் நீங்கி கணவன் - மனைவிக்குள் நெருக்கம் அதிகமாகும். சொந்த - பந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.

கடகம்: உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். தந்தைவழி சொத்துகள் கைக்கு வரும். வியாபாரத்தில் லாபம் உண்டு. வீண் குழப்பம் நீங்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.

சிம்மம்: தடைகள் விலகி காரியங்கள் நடந்தேறும். மூத்த சகோதர வகையில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த முக்கிய நபர்களை சந்திப்பீர். அஜீர்ண கோளாறு நீங்கும்.

கன்னி: வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். குலதெய்வ பிரார்த் தனைகளை குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவீர். வீட்டிலுள்ள பழைய பொருட்களை மாற்றுவீர். குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள்.

துலாம்: அடிமனதில் இருந்த பயம் நீங்கி, துணிச்சலாக சில முடிவுகளை எடுப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை நீங்கும். பிள்ளைகளால் பெருமை உண்டு. வியாபாரத்தில் லாபம் கிட்டும்.

விருச்சிகம்: வீண் செலவுகளை தவிர்ப்பீர். பேச்சில் தன்னம் பிக்கை பிறக்கும். குடும்ப வருவாயை உயர்த்த ஆலோ
சனை செய்வீர். வியாபாரரீதியாக புது நபர்களை சந்திப்பீர். மனைவிவழி உறவினர்கள் ஆதரிப்பார்கள்.

தனுசு: குடும்பத்தில் அனைவருடனும் அனுசரித்து போவது நல்லது. மன இறுக்கம், உடல் சோர்வு நீங்கும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். யாருக்கும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம்.

மகரம்: உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். பிள்ளைகளிடம் குவிந்துக் கிடக்கும் திறமைகளை இனம் கண்டறிந்து வளர்ப்பீர்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு.

கும்பம்: பழைய உறவினர்கள், நண்பர்கள் உங்களை தேடி வருவார்கள். சுபச் செலவுகளால் மனநிம்மதி உண்டு. சொந்த ஊரில் மதிப்பு, மரியாதை கூடும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள்.

மீனம்: தடைகள் அனைத்தும் நீங்கும். நீண்டநாளாக இழுபறியாக இருந்து வந்த வேலைகள் முடிவடையும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களும் உடனடியாக நிறைவேறும். விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

6 days ago

மேலும்